புள்ளிகளை
இணைத்து
அழகு கோலமாக்கிட...
என்
நெஞ்சே...
கிஞ்சித்தும்
துஞ்சா
உள்ளம்
கொண்டிட...
வல்லமை தாராயோ...
கசிந்துருகும்
உள்ளத்தின்
கண்ணீர்த்துளிகள்
கோர்த்து
மணி மாலையாக்கிட.....
என்
நெஞ்சே..
திடம்கொண்ட
மனதில்
தீப்பொறி
கனலாய் வென்றிட
வல்லமை
தாராயோ...
அறியாவண்ணம்
அணைக்க வரும்
அதைரியம்
அழித்து
நற்றுணையாக
கரம்கோர்க்க
நல்லிதயம்
ஒன்று இதம் சொல்லி
நம்பிக்கை
விதைக்க
உயிர்
நேசமாய் அருகிருக்க..
வல்லமை
தாராயோ....
உரங்கொண்ட
மனதோடு
உயிர்நிலைக்க
போராடும்
உணர்ச்சிகளின்
தளர்ச்சியிலே
வீழ்ந்துவிடாதிருக்க
வல்லமை
தாராயோ..
மனமே...
வேர்கொண்ட
பகைகள்
விதையின்றி
வீழ..
என்
கால்கொள்ளும் திடமாய்
வல்லமை
தாராயோ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக