வலைவீசும் எண்ணங்கள்
19. எச்சரிக்கை
உணர்வுகள்
இந்த பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் எச்சரிக்கை உணர்வானது இயல்பாகவே
அவற்றின் அணுக்களில் உறைந்துள்ளது. இதனால் தான் காலங்கள் கடந்தும் இந்த பூமியில்
அவைகள் பிழைத்த வாழ்கிறது. இத்தகைய எச்சரிக்கை உணர்வு மானுட வாழ்வில் சிற்சில
நேரங்களில் எதிர்மறை செயலாற்றி நம்மை தவிக்க விட்டுவிடுகிறது. இந்த வார வலைவீசலில்
இதைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.”
என்று அய்யன் வள்ளுவர் சொல்லுவது போல நாம் பல
நேரங்களில் நம் உள்ளுணர்வு நமக்கு உணர்த்தும் எச்சரிக்கை உணர்வினை புறந்தள்ளி ஒரு
நபரைப்பற்றி சரியாக ஆராயாமல் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து பின்
துன்பப்படுகிறோம்.
பல நேரங்களில் ஒரு செயலை நாம் தொடங்கும்போதோ,
ஒருவரை ஒரு செயலுக்காக அணுகும்போதோ நமது உள்ளுணர்வு மிகத்தெளிவாக எச்சரிக்கை
செய்யும். அதையும் மீறி நாம் அந்த செயலை செய்யும்போது தோல்வியே நமக்கு பரிசாக
கிடைக்கிறது.
இந்த எச்சரிக்கை உணர்வானது நமது மானுட வாழ்வில்
பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அவர்களின் இந்த எச்சரிக்கை உணர்வை ஆண்கள் மிக
எளிதாக “சந்தேக புத்தி”
என்று சொல்லிவிடுகிறார்கள். இந்த எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு ஏற்படக் காரணமாய்
இருப்பது புராணங்கள், வேதங்கள், பைபிள், குரான் இவைகளில் சொல்லியபடி பெண்கள்
முதலில் ஏமாற்றப்பட்டு பாவம் செய்ய தூண்டப்பட்டார்கள். அதன் மூலம் அவர்கள் தொடர்
துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அந்த தொடர்
துன்பங்களில் இருந்து தப்பிக்கவும், தங்களை பிரச்சினைகளில் இருந்து
பாதுகாத்துக்கொள்ளவும் இந்த சந்தேகம்
என்னும் எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு மிகுந்துள்ளது.
ஆனால் இந்த பாதுகாப்பு உணர்வை பெண்கள் சரிவர
உபயோகிக்கும் வழிமுறைகள் தெரியாது பலநேரங்களில் தவறான முடிவெடுத்து
இன்றும் வாழ்க்கையில் துன்பப்படுகிறார்கள்.
பெண்களை ஒப்பிடும்போது இந்த எச்சரிக்கை உணர்வு
ஆண்களுக்கு குறைவு என்ற சொல்லலாம். காரணம் ஆண்கள் எதுவாயினும் வரட்டும்
பார்த்துக்கொள்ளலாம், சமாளித்துக்கொள்ளலாம் என்ற லேசான மனநிலையில் இருப்பதால் இந்த
உணர்வு குறைவு என்று கொள்ளலாம்.
நமது மனதில் தோன்றும் நேர்மறையான எண்ணங்களில்
மூலம் நம்முடைய செயல்களில் தெளிவும், வேகமும், முடிவெடுக்கும் திறனும் கூடுகிறது.
ஆனால் எதிர்மறை எண்ணம் எச்சரிக்கை என்ற பெயரில் நம்மை ஆட்கொளும் போது நமது செயலில்
தடுமாற்றம் தோன்றி வேகத்தை குறைத்து அந்த செயலில் ஒரு தள்ளாட்டம் உண்டாகிறது.
மிகப்பெரிய விலங்கான யானை எப்போதும் தன் காதுகளை
ஆட்டிக்கொண்டே இருக்கும். அத்தன்மை யானைக்கு பிறப்பிலிருந்தே உண்டு. என்ன காரணம்
என்று பார்த்தல் எந்த ஒரு சிறு பூச்சியோ, எறும்போ, வண்டுகளோ, காதுக்குள் நுழைந்துவிட்டால், யானையின்
பாடு திண்டாட்டம்தான். அவற்றின் அளவு கண்டு யானை பயப்படவில்லை, பயப்படவும்
தேவையில்லை. ஆனால் யானை அந்த அளவுக்கு எச்சரிக்கையாய் இருக்கக் காரணம், சிறு
எறும்பு தன்னில் ஏற்படுத்தக்கூடிய தேவையற்ற விளைவுகளே..
மனிதர்களாகிய நாம் அறியாமல் செய்யும் பாவத்துக்கும்,
நாம் மனதில் கொள்ளும் இச்சைகளுக்கும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது
அவசியம். காரணம் அவர்கள் நமது வாழ்க்கையை பலசமயங்களில் மாற்றிவிடும் திறன் கொண்டது. நம்மில் பலர் தூங்கும்போதே
காலாட்டிக்கொண்டுதான் தூங்குவேன் என்று தங்கள் எச்சரிக்கை உணர்வு பற்றி சொன்னாலும், கடையிசில்
அவர்கள் எங்காவது எமாந்துவிட்டுவந்து நிற்பார்கள். இப்படி தான் நாமும் இது என்ன
சின்ன விஷயம் தானே என்று சில பாவங்களுக்கும், சில இச்சைகளுக்கும் எச்சரிக்கை
உணர்வில்லாமல் அனுமதித்து பின்னர் அவற்றால் சிக்கி கதிகலங்கி விடுகிறோம்.
எல்லாக்காவலோடும் இருதயத்தைக் காக்காவிடில்,
சிறு சிறு இச்சைகள், பாவங்கள்
உள்ளே நுழைந்து, நாம் நமது இனிய வாழ்வை இழந்துபோவோம்.
ஆம், உண்மையில் நாம் எவ்வளவு எச்சரிக்கை உணர்வை
கைக்கொண்டு நமது செயல்களை செய்தாலும் ஒரு எல்லைக்கும் வரையறுக்கப்பட்டு குறித்த
காலத்தில் முடிவுறும் ஒன்றாகும்.
எச்சரிக்கை என்ற பெயரில் நல்ல உறவுகள் மேல்
சந்தேக கண் கொண்டு பார்த்து கெடுத்துக்கொள்வதும், எத்தர்களின் நயவஞ்சக புகழ்ச்சி
வலையில் வீழ்ந்து வாழ்வை நாசப்படுத்திக்கொள்ளாமல் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாம் சேர்க்கும் செல்வங்களை எவ்வளவு தான்
எச்சரிக்கையாக பாதுகாத்தாலும் நாம் இந்த உலகை விட்டு போகும்போது எதையும் கொண்டு
போகப்போவது இல்லை. நாம் வாழும் நாட்களில் நம் தேவைக்கு மிகுதியான செல்வத்தை
ஏழைகளுக்கும், எளியோர்களுக்கும், நல்ல செயல்களுக்கும் செலவிடுவதின் மூலம் நாம்
வாழ்வின் வாழ்க்கையின் உண்மை அர்ததம் விளக்கும்.
நமது வாழ்வு, நமது குடும்பம் என்ற குறுகிய
வட்டத்தில் நமது பாதுகாப்பு என்ற குறுகிய எச்சரிக்கை உணர்வால் நாம் சேர்க்கும்
பொருளால் எந்த பயனுமில்லை.
ஆழிப்பேரலை காலத்திலும், ஊழி வெள்ளக் காலத்திலும்
எச்சரிக்கையாக இல்லாத காரணத்தில் நம்மில் பலர் அடைந்த துயரங்கள் வரிகளில் அடக்க
முடியாதவை. இருப்போரும், இல்லாதோரும் பேதமின்றி தத்தளித்த கணங்கள் என்றுக்கும்
மறக்காது.
இருந்தும் தன் வாழ்க்கை நலம் என்று குறுகி
வாழாமல் அழிந்து வரும் இயற்கையோடு நாமும் அழியும் உயிர்தான் உணர உண்மை உணர்த்து
இந்த உலகை எதிர்கால சந்ததிக்கு எந்த பழுதில்லாமல் ஒப்படைக்க எச்சரிக்கையாக
செயல்படுவோம்.
முடிவாக படித்த செய்தியை பகிர்ந்துகொள்கிறேன்.
“எந்த ஒரு மனிதனும், நாம் வாழும் பூமி தன் முப்பாட்டன் சொத்து என்று எண்ணாமல்
அவனுடைய வருங்கால சந்ததியரிடம் பட்ட கடன் என்று உணர்த்து இயற்கையை பேணுகிறானோ அவனே
சிறந்த மனிதன்” என்ற உண்மையை உணர்ந்து நம்முடைய இயற்கையை
காப்பதில் எச்சரிக்கையாக இருப்போம்.
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக