வெள்ளி, 13 மே, 2016

தேர்தல்...


பொய்களின் பளபளப்பில்
உண்மைகள் நட்சத்திரமாய்
பொலிவிழக்கிறது...

சில்லறைகளை சிதறவிட்டு
குனியும்போது
அவிழ்க்கப்படுகிறது இருக்கும்
ஆடையும்

கனவுகளில் வார்த்தைகளில்
கட்டப்படுகிறது
ஏமாளிகளின் கோட்டைகள்..

ஓட்டைப்படகில் ஏற்றி
நட்டாற்றில் தவிக்கவிட்டு
மூழ்கி ஓடுகிறது
நீலிக்கண்ணீர் முதலைகள்....!

இதயமே இல்லாத உதடுகள்
உச்சரிக்கிறது
என்வாழ்க்கை உங்களுக்காக...!

உண்மைகள் புரிந்தும்
விடிந்துவிடும் என்று கனவுகண்டு
நெருப்பில் விழுகிறது
இந்த விட்டில் பூச்சிகள்...


கருத்துகள் இல்லை: