செவ்வாய், 28 அக்டோபர், 2014

What is Happiness?






நமது இசைக் கருவிகளை அறிவோமா !!


இசையொடு வாழ்ந்தனன் தமிழன் என்பர் . இசை எனில் இங்கு புகழெனப்படும். புகழொடு வாழ்ந்தவன் தமிழன் என்றே பொருள் சொல்லுவர் . ஆயினும் இசையிலும் பெரும் முத்திரை பதித்தவன் தமிழன் . சங்கப்பாடல்களின் , சிலப்பதிகாரத்தில் இசைபற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் நிறைய குறிப்புகள் உண்டு .காரைக்காலம்மையார் எழுதிய மூத்த திருப்பதிகத்தில் திருவாலங்காடு குறித்து நட்டபாடை பண் என்ற குறிப்போடு உள்ள பாடல் ஒன்று வியப்பூட்டுகிறது .
“ துத்தம் ,கைக்கிள்ளை , விளரி , தாரகம்
உழை . இளி . ஓசைப்பண் கெழுமப் பாடிச்
சச்சரி , கொக்கரை , தக்கையோடு,
தகுணிச்சம் , துந்துபி , தாளம் , வீணை
மத்தளம் , கரடிகை வன்கை மெந்தோல்
தமருகம் , குடமுழா , மொந்தை வாசித்[து]
அத்தனை விரவினோ [டு] ஆடும் எங்கள்
அப்ப னிடம் திரு ஆலங் காடே !”
இந்தப்பாடல் ஏழு பண்களைச் சுட்டுகிறது ; அவையாவன துத்தம் , கைக்கிள்ளை , விளரி , தாரகம் , உழை , இளி , ஓசை . இந்த ஏழு பண்களை இசைத்து பல இசைக்கருவிகள் வாசித்து எல்லா ஒரு சேர கலந்திட சிவபெருமான் ஆடுகின்ற திருவாலங்காடே என்கிறார் காரைக்கால் அம்மையார் . அந்த வேகமான ஆட்டத்திற்கு வீரியம் சேர்த்த இசைக் கருவிகளை இப்பாடலில் பட்டியலிட்டுள்ளார் . சச்சரி , கொக்கரை ,தக்கை ,தகுனி ,துந்துபி,தாளம் ,வீணை , மத்தளம் ,கரடிகை ,தமருகம் ,குடமுழா,மொந்தை முதலியன . இவற்றில் பலவற்றை நாம் இப்போது அறிவோமா ? மொந்தை எனில் ஒரு மொந்தைக் கள்ளு என்ற அளவீடே நாமறிவோம் . மொந்தை என்கிற பெயரில் இரு இசைக்கருவி அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது .மிருதங்கம் எனில் உடனடியாகத் தெரியும் . ஆனால்அது தூய தமிழர் இசைக்கருவி என அறிவோமா ?அதன் தமிழ்ப்பெயர் மத்தளம் என்பதை எத்தனை பேர் அறிவோம் “ மத்தளம் முழங்க வரிசங்கம் நின்றூத ..” என ஆண்டாளும் பாடியுள்ளார் .
பண்டைத் தமிழனின் இசைக்கருவிகள் இவை மட்டுமோ ? தேடிய போது ஒரு பெரும் பட்டியலே அகப்பட்டது . கீழே தந்துள்ளேன் .இவற்றில் பல இப்போதும் புழக்கத்தில் இருக்கலாம் ஆனால் பெயர் திரிந்தும் சிதைந்தும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டும் , வேறு மொழி சொற்களில் சிறைபட்டும் இருக்கலாம் . யாராவது தேடி உண்மை உணர்த்துங்களேன்.
1. ஆகுளி
2. இடக்கை
3. இலயம்
4. உடுக்கை
5. ஏழில்
6. கத்திரிகை
7. கண்டை
8. கரதாளம்
9. கல்லலகு
10. கல்லவடம்
11. கவிழ்
12. கழல்
13. காளம்
14. கிணை
15. கிண்கிணி
16. கிளை
17. கின்னரம்
18. குடமுழா
19. குழல்
20. கையலகு
21. கொக்கரை
22. கொடுகொட்டி
23. கொட்டு
24. கொம்பு
25. சங்கு
26. சச்சரி
27. சலஞ்சலம்
28. சல்லரி
29. சிரந்தை
30. சிலம்பு
31. சின்னம்
32. தகுணிச்சம்
33. தக்கை
34. தடாரி
35. தட்டழி
36. தத்தளகம்
37. தண்டு
38. தண்ணுமை
39. தமருகம்
40. தாரை
41. தாளம்
42. துத்திரி
43. துந்துபி
44. துடி
45. தூரியம்
46. திமிலை
47. தொண்டகம்
48. நரல் சுரிசங்கு
49. படகம்
50. படுதம்
51. பணிலம்
52. பம்பை
53. பல்லியம்
54. பறண்டை
55. பறை
56. பாணி
57. பாண்டில்
58. பிடவம்
59. பேரிகை
60. மத்தளம்
61. மணி
62. மருவம்
63. முரசு
64. முரவம்
65. முருகியம்
66. முருடு
67. முழவு
68. மொந்தை
69. யாழ்
70. வங்கியம்
71. வட்டணை
72. வயிர்
73. வீணை
74. வீளை
75. வெங்குரல்