வியாழன், 26 மே, 2016

அவதாரம்

என்றென்றும்
எங்கெங்கிலும்
எக்கணமும்
சுயம் தொலைத்து
குடும்பத்தின் பாரம் தாங்கும்
சுமைதாங்கி கல்லாகி
நிற்பது ஆணின் அவதாரம்..

சகோதரிக்கு என்றும்,
சகோதரனுக்கு என்றும்
குடும்பத்திற்கு என்றும்
சொல்லி சொல்லியே
தனது தனிமையிலும்
கம்பீரம் காட்டுவது ஆணின் அவதாரம்..

எத்தனையோ வஞ்சனைகள்...
எத்தனையோ ஏமாற்றங்கள்..
எத்தனையோ இழப்புகள்...
பாரங்கள் எல்லாம் தாங்கி நிற்கும்
வேராய் புதைந்துள்ளது
ஆணின் அவதாரம்..

ஆடிக்கு செய்தாலும் அலுக்காது
மாமன் சீரிலும் குறை இருக்காது..
முறை செய்து முன்னின்று
கடந்துபோகும் பிறைகளாய் அவன்
வளைந்து நின்றாலும்
குறையாது ஆணின் அன்பு அவதாரம்..

தன் குடும்பம்
என்று சுருக்காமல்
நம் குடும்பம் என்றணைத்து
தன் இன்பம் என்று எண்ணாமல்
எல்லோர் இன்பமே தனதின்பம்
என்று உயிர் வாழ்வதில்
தனித்து நிற்கிறது
ஆணின் ஆரவார அவதாரம்..

கருத்துகள் இல்லை: