செவ்வாய், 17 மே, 2016

வீழ்வேனோ வெல்வேனோ


சுழன்றடிக்கும் காற்றின்
சுழலில் சிக்கிய சருகாய்
மனம்..

ஆழியில் சுழியில் வீழ்ந்து
அல்லல் படும் சிருபடகாய்
நான்..

நேசத்தோடு கரம்பற்றி
அன்பாலும், காதலாலும்
கட்டுண்ட வாழ்க்கை..

சுட்டெரிக்கும் பகலுமில்லா...
கடுங்குளிரின் இரவுமில்லா..
இன்பம் தரும்
அந்தி மாலை பொழுதாய் இனிமை..

புரிதலோடு நல்ல இன்பமுண்டு..
ஊடலோடு மன பேதமுண்டு..
இடையினிலே யாருக்கும்
அனுமதியில்லை.....

காலக்கொடுமை தரும்
சோதனைத் தாழியிலே
தள்ளிவிட்டு வேடிக்கப்பார்த்து
சிரிப்பது யார்....?
விதியா.....?

போராடி வெல்வேனோ..
வழியின்றி வீழ்வேனோ..

மலர்ந்திட்ட பூக்கள்
உதிர்வது வாழ்க்கை எனில்...
கருகுவது...?

கார்மேகம் கவிழ்த்து அழ..
காற்று பாடும் முகாரி சரியா...??

வேதனைகள் வெந்தணலாய்
நெஞ்சினிலே பற்றிக்கொள்ள
நான்
வீழ்வேனோ..?

வாழ்வேனோ..?

கருத்துகள் இல்லை: