காதல்
சுவைதரும் இனிப்பென நினைத்தால்
சுவைக்க சுவைக்க திகட்டும்..
காதல்
தீங்கனிச்சுவை என நினைத்தால்
சேர்த்துவைக்க அழுகிவிடும்..
காதல்
உணர்தலும் பகிர்தலும்
தனதென நினைக்காத பொதுவுடைமை..
நீயும் "எனக்கு"
சொந்தம்
நானும் "எனக்கு"
சொந்தம்
எண்ணங்களில் விளையும்
அதீத காதல்
சுவைக்க சுவைக்க கசக்கும்
வேதி சுவையூட்டியாம்
சாக்கரின் போலாகி
கசந்திடும்..
உணர்ந்திடு உள்ளமே..
உண்மை புரிந்திடு..
காதல்
கட்டுப்பாட்டில் வைக்காதே..
எல்லோருக்கும் பகிரட்டும்..
நீ பகிர அனுமதிக்கும் போது
தேடி உன்னை வந்தடையும்..
நீ
தடுத்து ஆட்கொள்ள
முனையும்போது
விட்டு விலகிச்செல்லும்
பட்டாம்பூச்சியாய்
கசப்பை மட்டுமே
நினைவுகளாய் தந்து செல்லும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக