அந்திசாயும்
வேளையிலே
மறைந்துவிடும்
சூரியன் தான் – எனில்
சூரியோதத்தை
காணாமல்
கண்மூடிக்கொள்வதா..?
தினம் வாடி
மெல்ல
உதிர்ந்துவிடும் வாசமலர்கள் – எனில்
பூக்களின்
சிரிப்பை
பார்க்காமல்
கடப்பதா...?
வெட்டிவிடும்
மின்னலென்று
வானத்தை
பார்க்கவில்லை – எனில்
பூத்துக்குலுங்கும்
நட்சத்திர தோட்டத்தை
ரசித்திடத்தான்
முடியுமா?
மணற்பரப்பில்
தேங்கி நிற்கும்
தேக
அழுக்கோடு
கோடையில்
வற்றிவிடும் – எனில்
நீர்ச்சுழிக்க
ஆடிவரும்
ஆற்றின்
அழகை சுவைப்பது எப்படி?
சருகுகள்
தரைவீழ
மொட்டையாகும்
மரங்கள் – எனில்
வசந்தகால
குளிர் மலர்ச்சியை
மறுப்பது
யாருக்கான தண்டனை..
துக்கங்களுக்காக
சிந்த மட்டுமா
கண்ணீர்
துளிகள்..?
நமது
சந்தோஷ பெருக்கில் – அது
அருவியாய்
கொட்டட்டுமே...!
தேகம்விட்டு
நாசிவழி
வெளியான
மூச்சுக்காற்றும் நின்றுவிட..
சுழல்கின்ற
நேரத்திலே சென்றுவிட்ட
மணித்துளிகள்
மீளாது காண்...
சொல்லமுடிய
நொடியில்
சட்டென்று
முடிந்துவிடும் வாழ்க்கை – எனில்
வாழ்வின்
இனிமைகள் ரசிக்காமல்
துக்கங்களிலா
வாழ்கிறோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக