புதன், 17 மே, 2017

பண் பாடும் தமிழ்..

தூதுவர் போல் கீற்று விட்டு
தூக்கித்தலை நிமிர்த்தி
நாதமணி தென்றலிலே நடனமிடும்
தென்னையைப்போல்..
ஆதிரைக்கும் கார்த்திகைக்கும்
ஆயிழையார் ஏற்றிவைக்கும்
தீபமென மின்னலிடும் செம்மலர்போல் வெண்மலர்போல்..
பாதிமொழி வாராமல் பாட்டிசைக்கும் பூங்குயிலும்
பாக்கு வரும் முன்னாலே பறந்துவிட்ட வெற்றிலை போல்
மோதிச்சிறகடிக்கும் முத்தான கிள்ளைகளாய்
சேலையிலே கோவில் கட்டி
சிற்றிடையில் பின்னலிட்டு
பாலமுதப் பூமுகத்தே
பட்டொளிரப் பொட்டு வைத்து....
நாலுமுழ சேலையிலே நாணமது முந்திவர
ஆசை நடத்திவர அச்சமது பிந்திவர
போதார் நறுங்குழலில் போதை மலர்செறிய
எங்கள் கோதைமகள் வருகிறாளே..

- கேட்டதில் பிடித்ததை இங்கே சொற்களில் தந்து இருக்கிறேன்