விருட்சமாக வளர
வீரியமாய்
பூமி பிளந்து வரும்
விதைகள்....
அன்பை அள்ளி
வழங்குவதில்
குறைவில்லா
கார்மேக உள்ளங்கள்..
காணமுடியா கடவுளின்
மறுவுருவாய்
கண்முன் வாழும்
தாய்மை...
எல்லையில்லா
பெருங்கடலின்
உள்ளமென பெருங்கருணை
பேரொளி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக