நினைத்துக்கூட பார்க்கமுடிவதில்லை
இந்த பிஞ்சுகள் எப்படி சுமக்கிறது
புத்தக சுமைகளை...!
சுதந்திரமின்றி பயில
விலைகொடுத்து விற்கப்படுகின்றனர்
இந்த மலரும் மொட்டுக்கள்..
சுயமாய் எழ முடிவதில்லை
சொல்லிக்கொடுப்பதை
வாந்தியெடுப்பதில்
என்ன மேதாவித்தனம்...?
சிந்திக்கும் அடிமைகளாய்
வாழ்க்கை சிறையில்
வேலைக்கூண்டில்
அடைக்கிறது கல்வி...!
பணமெண்ணும்
எந்திரக்கூடங்கலாய்
பள்ளிக்கூடங்கள்...!
பாழும் மதிப்பெண்
போட்டியிலே
முடங்குகிறது மனம்..
நடக்கையில் உணவு..
திரையினில் விளையாட்டு..
தேயும் பிறைகளாய் வளைந்து
மனிதங்கள் மங்கிய
மனதுடன் வளருகிறது
எங்கள் எதிர்கால
நம்பிக்கை நட்சத்திரங்கள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக