காற்றடித்தால்
தலையாட்டும்
மரமாக
நிற்கிறது இளம் பருவம்....
கொட்டும்
பூக்களாய் எங்கும்
புன்னைகை
கொண்டு சிதறுது
அவர்கள்
இன்பம்..
துளித்துளியாய்
சிந்தும் மழை..
மெல்ல
சேர்த்திடுமே இவர்கள்
உற்சாக
வெள்ளம்..
புயல்
ஒன்று கடந்து செல்ல..
புதுராகம்
பிறந்தது மெல்ல..
ஏழ்மை
வந்து கரைகட்டுமா..!
இந்த
உற்சாக வெள்ளத்திற்கு?
வானம்
கிழிந்ததுபோல்
உடை
கிழிந்தால் என்ன?
மகிழ்ச்சிக்கு
குறைவில்லை
இவர்கள்
துள்ளலுக்கும் அளவில்லை..
துள்ளி
வரும் இளம்பிறைகள்..
உள்ளத்தில்
கள்ளமில்லா
கனவுகளின்
துள்ளலுண்டே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக