வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிந்தனைத் துளிகள் - படித்ததில் பிடித்தது


* யாரிடமும் நூறு சதவீதம் நல்லதோ அல்லது நூறு சதவீதம் கெட்டதோ இருக்காது. இரண்டும் கலந்துதான் இருக்கும். நமக்கும் இது பொருந்தும்.
`
* ஒருவன் எத்தனை பேருடன் நட்பு வைத்துக் கொள்கிறான் என்பது முக்கியம் அல்ல. எப்படி நட்பைக் காப்பாற்றிக் கொள்கிறான் என்பதுதான் முக்கியம்.
`
* கோபப்பட்டுத் தாக்குவதற்கும் எதிர்ப்பதற்கும் ஒரு பலம் தேவை என்றால், அமைதியாக இருப்பதற்கும் தாக்காமல் இருப்பதற்கும் இன்னொரு பலம் தேவை. அது மனத்தின் பலம்.
`
* மனம் நல்லதாகவும் தூய்மையாவும் இருந்தால் அதில் ஒரு செளகர்யம் இருக்கிறது. வீண் பயங்கள் வராது.
`
* வெற்றி பெற்றவர்களை மேலோட்டமாகப் பார்த்தால் மட்டும் போதாது. அவர்கள் பெற்ற வெற்றிகளின் பின்னால் எத்தனையோ தோல்விகள் இருக்கும். அவற்றைக் கடந்துவந்துதான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாய் காட்சி அளிக்கிறார்கள்.
`
* அவன் எப்படிப்பட்டவன்? இவன் எப்படிப்பட்டவன்? என்று பிறரை ஆராய்ச்சி செய்யும் மனிதனே! நீ எப்படிப்பட்டவன்? என்பதை மேலே இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ஞாபகம் வைத்துக் கொள்.
`
* மனித உறவுகளில் சிக்கல் வந்தால் சம்பந்தப்பட்ட இருவருக்குமே மனித உறவு பற்றிய விழிப்புணர்வும் படிப்பினையும் தேவை

சிந்தனைத் துளிகள் - படித்ததில் பிடித்தது
****************************************
எதிர்பாராதே அதிகமாய்க் கொடு.

சிந்திப்பதை நல்லதாக சிந்தித்துவிடு
வார்த்தைகளை அளவாக பேசிவிடு.

இழந்ததை மறந்து விடு ஆனால்
அதில் ஏற்பட்ட பாடத்தை மறக்காதே

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விட
தோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிட
வெற்றிபெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமே 
துன்பங்களையும் துயரங்களையும்
மறக்கச்செய்யும் இடம்

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய்
ஆனால்மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை செய்யாதே

ஒருவரை ஒருவர் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். அதில்தான் தவறுகளும், பயனற்ற பிழைகளும் செய்யாமல் தப்ப வழி இருக்கிறது.

அறிவுரை தேடிச் செல்லாதவன் மடையன். அவனது மயக்கம், அவனை உண்மை அறியாமல், குருடாக்கி விடும். அவனைத் தீயவனாய், பிடிவாதக்காரனாய், சுற்றி இருப்பவர்க்கு ஆபத்தானவனாய் ஆக்கி விடும்.

விசாலமான அறிவையும, அனுபவங்களையும், மதிப்பீட்டு அறிவையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லையெனில், நான் ஒரு ஆலோசகன் ஆக முடியாது.

அவசரத்தை நிதானமாக்கு. வாய்ப்புக்கள் வருகையில் சோம்பேறியாய் இருக்காதே. அப்போதுதான் பெரிய பிழைகளைத் தவிர்க்கலாம். முளைவிட்ட நெருப்பு அணைந்து சாம்பலாகும்வரை சும்மா இருந்து விட்டு, அப்புறம் ஊதிக்கொண்டிருப்பவனைப் போல் இராதே.

கடந்து போனவைபற்றி எண்ணி நம்பிக்கை இழந்து விடாதே. திரும்பி வராதவைகளுக்காக அழுது புலம்புவது மனித பலவீனம். நேற்று என் செயல்களுக்கு வருந்தினேன். இன்று நான் என் பிழைகளையும், தீமைகளையும் புரிந்து கொள்கிறேன். அத்தோடு என் நடுக்கத்தையும் அழித்து விட்டேன்.
`


நன்றி: கலீல் ப்ரான், ஞானிகளின் தோட்டம்.

கருத்துகள் இல்லை: