விழிகளின்
பார்வைகள் மங்கி
ஓடிக்கொண்டிருக்கிறது
கால
ஓட்டத்தில் சுயம் தொலைத்த
மனிதம்
நியாயங்கள்...!
பார்வையில்
மறைந்த
காட்சிப்பொருளாய்....
தினந்தோறும்
காட்சிப்பிழைகளாய்
கண்ணெதிரே
வருகிறது
அவலங்கள்..
விழியுதிர்
நிலையில்
கடந்து
செல்கிறது மனம்..
மீறல்களும்
சாடல்களும்
காணாத
கேளாத
காலத்தில்
கடக்கிறது
வாழ்க்கையின்
ஓட்டம்..
கலியுகம்
என்று சொல்லி
கைகட்டி
நிற்பதும்..
இனியொரு
விதி செய்வோம்
என்று
எழுட்சிக்குரல் ஒலிக்க..
போராட்ட
வீதியில்
ஊடகங்கள்
முன்னால்
முகம்
காட்டி
பின்னால்
மெல்ல மெல்ல
கடந்து
போகிறது
“விழியுதிர்
காலத்து”
வீரர்
கூட்டம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக