வியாழன், 22 ஜனவரி, 2015

வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்.....!

இது ஒரு சுவாரஸ்யமான கதை. அதாவது ஒரு தம்பதிகள் தங்களது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்ததற்கான ரகசியம் பற்றியது.

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள். மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன். அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.

இப்படி தான் பலரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. உண்மை தானே..! 



ஹர்ஷாவின் ஸ்ட்ரெயிட் டிரைவ்....

கிரிக்கெட் வர்ணனை என்று வந்துவிட்டால் ஹர்ஷா போக்லே தனிக்காட்டு ராஜா. மற்ற வர்ணனையாளர்கள் கிரிக்கெட் ஆடிவிட்டு வந்தவர்கள் என்கிற உணர்வோடு பேசுவார்கள். ஹர்ஷாவோ கிரிக்கெட்டின் ஆன்மாவை காதலிக்கும் ஆழமான நபர். வார்த்தை ஜாலம், ரசிக்க வைக்கும் சாதுரியம் என்று கலக்கி எடுக்கும் அவரின் கமெண்ட்ரியில் இருந்து சில கலக்கல் வரிகள் :
ஐ.பி.எல்லில் இஷாந்த் ஷர்மாவின் பந்தை கச்சிதமான ஸ்ட்ரெய்ட் டிரைவாகச் சச்சின் மாற்றிய பொழுது :
"பாடப்புத்தகத்தைத் திறங்கள். பக்கம் 32-க்கு நேராகப் போங்கள்."
தோனி மிட்சல் ஸ்டார்க்கின் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கணத்தில் :
"உலகத்தின் எல்லா நேரமும் இவர் வசம் இருக்கிறது. அவரால் இந்த இடைவெளியில் செய்தித்தாளை கூட வாசித்திருக்க முடியும்."
அசரவைத்த திராவிடின் பார்மை பற்றி :
"திராவிட் தண்ணீரில் நடக்க வேண்டும்" என்று சொல்லுங்கள், "எத்தனை கிலோமீட்டர்?" எனக்கேட்பார்
மாக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தின் பொழுது :
புயல் வேகத்தில் நுழைந்து பின்னவே அவர் விரும்புகிறார். காரை ஓட்ட கொடுத்தால் நான்காவது கியரில் தான் ஆரம்பிப்பார் மாக்ஸ்வெல்!
ஸ்லிப்பில் கேட் செய்யப்பட்ட பின்பும் காத்திருந்த மைக்கேல் கிளார்க் பற்றி :
அனேகமாக நாளைய செய்தித்தாள் தன்னை அவுட் என்று அறிவிக்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன்
இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் நரேந்திர ஹிர்வானி ஆட வருகையில் இயான் சேப்பல் ,"இவர் எப்படிப் பேட்டிங் செய்வார்?
" என ஹர்ஷாவை கேட்கையில்,
"உலகின் எல்லா அணிகளின் 11-வது வீரர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கினால் அதிலும் 11-வது வீரராக இவரே வருவார்."
உத்தப்பா, யுவராஜ் சிங் அடித்து நொறுக்கிக்கொண்டு இருந்த பொழுது
புக் கிரிக்கெட் போலத் திறக்கிற பக்கமெல்லாம் சிக்ஸரும், பவுண்டரியுமாகப் பறக்கிறது.
வருண் ஆருண் இறுதி ஆட்டக்காரராகக் களமிறங்கிய சூழலில்,
"கிரிக்கெட் மட்டும்தான் உங்களுக்கு எது சுத்தமாக வராதோ அதைக் கண்டிப்பாகச் செய்யச்சொல்லி உயிரை எடுக்கும் ஒரே விளையாட்டு."
தோனி ஒரு முனையில் பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி அடித்து விரட்டிக்கொண்டு இருந்தார். ஒரு பந்து ஸ்ட்ரைக் கிடைத்ததும் சச்சின் மென்மையாக ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்பொழுது,
"ஒரு பக்கம் கசாப்புக்கடைக் காரரும், இன்னொரு பக்கம் அறுவை சிகிச்சை நிபுணரும் நிற்கிறார்கள்."
தோனி இன்னொரு முறை டாசை இழந்த பொழுது,
"இரண்டு பக்கமும் பூ இருக்கிற நாணயத்தைச் சுண்டி விட்டு
தலை கேட்கிறார் தோனி."
திராவிடுடன் இந்தியா தோற்றுக்கொண்டு இருந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் வர்ணனையில் :
இப்பொழுது இந்திய அணியைக் காப்பாற்றக் கூடிய நபர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.
CLT20-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இறுதிப் பந்தை திராவிட் எதிர்கொண்ட நொடியில் :
நயம், கவர்ச்சி, அழகான ஆட்டத்திறன் எல்லாம் ஒருங்கே கொண்டிருந்த ஒரு வாழ்க்கை இந்த ஷாட்டோடு முடிவுக்கு வந்தது. ஆனால், எப்பொழுதும் போலத் தேவைப்பட்டதை மட்டுமே செய்திருக்கிறார் அவர்.
பாய்ந்த போலார்ட் ஒரு கேட்சை தவறவிட்ட பொழுது,
"போலார்ட் ஒரு பந்தை பிடிக்காவிட்டால் அது கேட்ச்சே இல்லை!"
அனில் கும்ப்ளே டெஸ்டில் சதம் அடித்த பொழுது :
இந்திய கிரிக்கெட்டின் மிக ரொமாண்டிக்கான தருணம் இது.
மைக்கேல் வாகனின் சுழற்பந்து வீச்சில் 2002-ல் சச்சின் அவுட் ஆனபொழுது,
"என்ன ஒரு அவமானம். வேகமாக மூக்குக்கு மேலே பறந்து வந்த குண்டுகளில் இருந்து எல்லாம் போர்க்களத்தில் தப்பிய வீரன், சொந்த ஊரில் சைக்கிள் மோதி இறப்பதை போன்றது இது. "
சச்சினாக இருப்பதன் கஷ்டம் பற்றி :
"நீங்கள் சச்சினாக இருப்பதின் சிக்கல் நீங்கள் எப்பொழுதும் சச்சினோடு மட்டுமே ஒப்பிடப்படுவீர்கள்."
சச்சினின் அழகான ஒரு ஸ்ட்ரெயிட் டிரைவுக்குப் பின்னர் :
உலகம் இந்த ஷாட்டுக்கு பின்னர் இன்னமும் அழகாகத் தெரிகிறது.
சக வர்ணனையாளர் இயான் சேப்பலிடம் :
"நீங்கள் நிச்சயம் வக்கீலாக முடியாது. நீங்கள் சொல்கிற அனைத்தும் எனக்கு அப்படியே புரிகிறது."
திராவிடை ஏன் சுவர் என்று அழைக்கிறோம் என்பதைப் பற்றி :
திராவிட் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள ஆட வருகிற காட்சியை விட உலகில் அமைதி தரும் தருணம் வேறு இருக்க முடியுமா?
இந்தியா ஏன் பிபா உலகக்கோப்பையில் கலந்து கொள்வதில்லை என்று நாசர் ஹூசைன் நக்கல் அடித்த பொழுது :
"நாசர் நாங்கள் பிபாவில் கலந்து கொண்டு ஒரு வெற்றியும் பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறுவதை விடப் பங்கேற்காமல் இருப்பது மேல் என்று எண்ணுகிறோம்."
சச்சின் இன்னுமொரு கவர் ட்ரைவ் அடித்த பொழுது :
அந்தப் பந்தின் எல்லாப் பக்கத்திலும் "நீ இப்பொழுது பவுண்டரிக்குப் போ..உன்னை பின்னால் சந்திக்கிறேன்." என்று எழுதப்பட்டு இருந்தது போல
மூலம் :
http://www.scoopwhoop.com/sports/harsha-bhogle-quotes/
- பூ.கொ.சரவணன்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

High Time to WAKE UP and look for alternatives - IT Companies LAYOFF on the Rise - ANALYSIS - மெள்ள ஆரம்பிக்கிறது ஐ டி இன்டஸ்ட்ரி வீழ்ச்சி - விழித்து கொள்ளமல் விட்டில் பூச்சியாய் மாறிய புதிய தலைமுறை
ஒரு புறம் 25,000 ஐடி ஊழியர்களுக்கு வேலை பறிக்கபட்ட சம்பவம் - இன்னொரு ஐடி கம்பெனி திறம்பட உழைத்தவர்களுக்கு 65 ஆயிரம் மதிப்புள்ள ஐ ஃபோன் 6 கொடுக்கிறது - இன்னொரு ஐடி ஜாம்பவான் மெர்ஸிடிஸ் பென்ஸ் அல்லது விலை உயர்ந்த 5 நட்சத்திர விடுமுறை............................
இந்தியாவின் நெ 1 மென் பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்ஸல்டன்சி செர்விஸஸ் ஒவ்வொரு வருடமும் 1300 கோடி டாலர்களை வெளி நாட்டில் இருந்து கொணரும் இந்த கம்பெனியில் 3,13,000 பேருக்கு மேல் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் அரசாங்கம் கூட தராத 33% பெண்களுக்கு தரும் ஒரே நிறுவனம் - டிசம்பர் மாதம் 30 ஆயிரம் வரை கம்பெனியில் ஆட்குறைப்பு என குண்டை தூக்கி போட்ட காரணம் - திறன் குறைந்த ஊழியர்களால் மிகுந்த நஷ்டத்துக்கு கம்பெனி சென்று லாப விகிதம் குறையும் காரணம் என்று - ரீஸ்ட்ரக்ச்சரிங் பிராஸாஸை துவங்கி பல பேரை டெர்மினேட் செய்தது, செய்கிறது, செய்ய போகிறது. இதன் உண்மை நிலையைத்தான் நாம் அறியப்போகிறோம்,,,,,,,,,,,,,
தெருக்கு தெருக்கு டாஸ்மாக் போல் எங்கு நிறைந்த பொறியியல் கல்லூரிகளின் கைவண்ணம் தான் இதற்க்கு முக்கிய காரணம். இவவ்வகை கல்லூரிகளில் படிக்கும் பலருக்கு அவர் பெற்றோர் காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு சூத்திரம் கூட தெரியாமல் எஞ்சினியர் ஆனது இன்னொரு கொடுமை ............இவர்களின் கடைசி ஆண்டு கேம்பஸ் தேர்வு நடத்தி அங்கு விளைந்த அரை குறை உருளைக்கிழங்கான நம்ம எஞ்சினியர்களை தரம் வாரியாக பிரிக்காமல் சைஸ் வாரியாக பிரித்து மூட்டை மூட்டையாய் ஐடி கேம்பஸுக்கு கொண்டு போய் கொட்டிய உடன் - மர பெஞ்சு - வேகாத சோறு - வெளக்கமாறு வார்டன் - வெங்காய புரஃபஸர் இவர்களையே பார்த்து பார்த்து பழகிய பல பேருக்கு - முன்னாள் பீ காட்டில் எழுப்பிய வான் உயர்ந்த கட்டிடங்கள் - வழு வழு தரைகள் - வரை காப்பி - வயர்லெஸ் இன்டர் நெட் - வட்டியில்லா பெரும் சம்பளம் - வாசல் வரை கார் பிக்கப் டிராப்புக்கு - வசதி வாழ்க்கை என விட்டில் பூச்சிகளாய் போய் இவர்கள் தொலைப்பது இளமையை மட்டும் அல்ல - வாழ்க்கையே தான்.
எந்த ஒரு விவசாயி செத்தானா எனக்கென்ன / எந்த ஒரு போராளி செத்தா எனக்கென்னா - ஆஃப் ஷோர் / ஆன் சைட் / ஆஃப் சைட்டில் காரி காரி துப்பும் ஆங்கில கஸ்மாலங்களை 24 மணி நேரமும் உள் வாங்கி கொண்டு ஸ்மார்ட் ஃபோனு / ஸ்ம்சா வோ அம்சாவோட பீர் / செகனேன்ட்லாயவது ஒரு கார் இப்படி ஒவர் நைட்ல புதுப்பணக்காரன் ஆவது ஐடி ஜெனரேஷன் மட்டுமே.............ஆரம்பத்தில் அமர்க்களமாகவே தெரியபட்ட இவர்களின் வாழ்க்கை எண்ணி 3 மாதத்தில் உடம்பில் உள்ள பயாலஜி கிளாக் மாறி எப்ப துங்கனும் எப்ப சாப்பிடனும் எப்ப உழைக்கனும்னு தெரியாம ஒவ்வொரு ஐடி கம்பெனி அனுப்பும் பால் வண்டிகளில் பிச்சுவா பக்கிரிகணக்கா பின்னாடி உட்கார்ந்தே தேமேனு முழிச்சுகிட்டு அல்லது தன்னையும் அறியாமல் ஜொல் வழிய தூங்கி கொண்டே ஷேர் அட்டோவோடு கேவலமாய் நசுங்கி கொண்டு செல்லும் இவர்களை பார்க்கும் போது வெள்ளைக்காரன் நம் நாட்டில் இன்னமும் அடிமையாய் வைக்க என்ன்வெல்லாம் புது டெக்னாலஜி கண்டுப்பிடித்திருக்கிறான் என்று ரோட்டில் குப்பை அள்ளுபவன் முதல் கோயம்பேட்டில் மூட்டை தூக்குபவர் வரை எண்ண தவறுவதில்லை. ஐடி ஐடி ஐடி என்று பட்டி தொட்டி முதல் பாரின் சரக்கு விற்க்கும் ப்ரீமியர் டாஸ்மாக் வரை கோலொச்சிய ஐடி இப்போது தான் முதல் நோயை கண்டிருக்கிறது. அதுவும் அல்ப வயசில் (30 - 32) என்ற வயது போய் சேரும் வயசே இல்லை - ஆயினும் இவர்களின் நிலை என்னவோ ரேஸ் குதிரை போன்று தான் - சப்பானி ஆன குதிரை மட்டும் தான் அடிமாட்டு கம்மாடிட்டி இல்லை சற்றே வேகம் குறைந்த குதிரைக்கு கூட இறக்கும் தேதி குறிக்கப்ப்டும் அதே ஃபார்முலா தான் இங்கேயும்...............33 - 35 வயதில் வெளி வரும் இவர்களுக்கு அரசு உத்யோகமும் கிடைக்காது - அப்பா நீ ரிட்டையர் ஆகும் போது 40 வர்ஷ எக்ஸ்பிரியன்ஸ்ல‌ வாங்கின சம்பளத்தை முதல் மாதத்தில வாங்கினேன் பாருப்பா இனிமேயாவது புழைக்க தெரிஞ்சுக்கோப்பான்னு எகத்தாளம் செய்தவன் / ளின் நிலைமை என்ன வாக போகிறது இனிமேல்.............இது எதனால்? இதை உணர்ந்து இவர்கள் செய்யவேண்டியது என்ன? இதை எப்படி அவாய்ட் செய்யலாம் - ஐடி இல்லையேல் உலகம் இல்லை என்பது உண்மை ஆனால் இவர்களின் சர்வைவல் எப்படி செக்யூர் செய்ய வேண்டும் 

புதன், 7 ஜனவரி, 2015

‎ஒரு_கைப்பிடி_அரிசி‬...


சென்னை பரபரப்பாக விடிந்திருந்தது ரோபோ கான்ஸ்டபிள்கள் போக்குவரத்து சிக்னல்களாகவே செயல் பட்டுக்கொண்டிருந்தனர்.. இன்றைக்கு சாலைப் போக்குவரத்து தினம்..! வான் வெளி போக்குவரத்து தடை செய்யப்பட்ட நாள்... மக்களும் தங்கள் ஹெலி டாக்சிகளை Road Modeக்கு மாற்றி இருந்தார்கள்..
எல்லோரும் பரபரப்பாக ஆவலாக சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் முகத்தில் மிகப் பெரும் ஆச்சர்யம் பொங்கிக் கொண்டிருந்தது.. இதயம், மூளை, கை, கால் போன்ற மாற்று உடல் உறுப்புகள் விற்கும் அரசு மெடிக்கல்களில் புதிய கண்கள் வாங்கி பொருத்திக் கொள்வதில் பெரும் கூட்டம் நின்றிருந்தது..!
எல்லோரும் எதையோ பார்க்க போகும் பரபரப்பு அந்த நகரின் காற்றில் கலந்திருந்தது... "நீ பார்த்துட்டியா? நிஜம் தானா? எப்படி இருந்தது? தொட்டு பார்த்தாயா? தொட அனுமதித்தார்களா? இப்படியான கேள்விகள் தான் ஒருவருக்கு ஒருவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளாக இருந்தது..!
21 ஆம் நூற்றாண்டின் அரிய பொருள் ஒன்றை பொது மக்கள் பார்வைக்கு அரசு அருங்காட்சியத்தில் வைத்து இருப்பதை தான் அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருந்தனர்.. இன்று தான் கடைசி தினம் அதை பார்வையிட.. பொது மக்கள் கூட்டம் கூட்டமாக அருங்காட்சியகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்...!
அருங்காட்சியகம் அமைந்திருக்கும் சாலைக்கு 2 கி.மீக்கு முன்பே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.. எங்கும் இராணுவ வீரர்கள் தலைகள் தான் ஹை டெக் லேசர் துப்பாக்கிகளுடன் ரோந்து வந்து கொண்டிருந்தனர். வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தது..ஏலியன் ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டு வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
அந்தப்பகுதி முழுவதும் பாதுகாப்பு, பாதுகாப்பு, பாதுகாப்பு... அருங்காட்சியத்திற்கு ஒரு கி.மீக்கு முன்பே மக்கள் கூட்டம் நீநீநீநீநீநீநீநீண்ட வரிசையில் காத்திருந்தது.. அனைவரின் முகத்திலும் விவரிக்க முடியாத உணர்வுகள்.. மெல்ல காய்கறிப் புழு போல் கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.. பார்த்தவர்கள் எதிர்புறம் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அவர்கள் முகங்களில் நம்ப முடியாத பரவசம்.!
அந்த பொருள் அணுகுண்டால் கூட சிதைக்க முடியாத சிலிக்கான்ஃபுரூப் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்தது.. கண்ணை உறுத்தாத அதே நேரம் பிரகாசமான விளக்கொளியில் பளீரென தென்பட்டது அப்பொருள்..ஒவ்வொரு பார்வையாளருக்கும் 5 வினாடிகள் மட்டுமே பார்வை நேரம்.. !
பார்வையாளர் நின்று பார்க்க உயரமான ஒரு மேடை.. அதில் ஒருவர் தான் நிற்கமுடியும் கை குழந்தைகள் உள்ளவர்கள் மட்டும் குழந்தையோடு நிற்க அனுமதி.. அதோ அந்த பெண்மணி தன் 2 வயது குழந்தையோடு நின்று சொல்லிக் கொண்டிருந்தாள்.."அதோ பார்.. அது தான் நம் முன்னோர்கள் உண்டு உயிர் வாழ்ந்த பொருள்" என்று..
அந்த ஒளி வெள்ளத்தில் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் தெரிந்தது.. ‪#‎ஒரு_கைப்பிடி_அரிசி‬...

வெள்ளி, 2 ஜனவரி, 2015

மனைவியை மயக்க 10 வழிகள்…!


1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்

`ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்'.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்'

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்' இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்' என்று `பழைய டயலாக்' பேசுவதில் தவறில்லை.


நன்றி: Jayant Prabhakar

வியாழன், 1 ஜனவரி, 2015

புரியாத நிலை

மனநிறைவுடன் வலம்வந்தாலும்
மனதின் மூலையில் சிறுதவிப்பு...
மறுத்துவிட மனது கணக்கிட்டாலும்..
மௌனங்களே இங்கு மொழியாய்...
கண்களால் பேசியே தினம்
வதைத்திடும் பாவை..
கனவாய் இருந்தால் மனதில்
குழப்பம் ஏது..?
நனவாய் இருப்பதால்
நிம்மதி அழியுமோ...?
பார்க்கும் கண்ணில்
மூடும் இமையில்
உயிர் தரும் மூச்சில்
உரிமை கொண்டு..ஊடல் கொண்டு
கண்கள் பனிக்க
காணும் பாவையே..
என்னை விடு..
எண்ணவும் விடு...
என் நினைவுகள் நினைக்குது..
நிலவும் உண்மையோ மறுக்கிறதே..
இன்பமான குழப்பம்...