சந்தனக்காட்டில்
மெல்லத் தவழ்ந்துவந்த
தென்றல்..
சந்தனத்தின் சுகந்தத்தை மெல்ல ‘சுட்டு’
என்னிடம் சேர்ந்தது..
பூவனத்தில் நுழைந்த
தென்றல்
பூக்களின் வாசங்களை கொஞ்சம் ‘சுட்டு’
என் நேசம் நிறைத்தது....
தவழ்ந்துவந்த வெண்மதியை
தழுவி அதன் குளிர்ச்சியை ‘சுட்டு’
இன்ப மோகம் தந்தது..
தனிமையில் கண்ட
இனிமையில்
கோபம் கொண்டால் என்னவளும்
அவளை சரிக்கட்ட தென்றலை
தூதாக செல்ல வேண்டி..
சுகந்தத்தையும்
வாசத்தையும்
குளிர்ச்சியையும்
கூடவே கொடுத்தனுப்ப..
தென்றலோ
எல்லாம் தந்து
அவள் மனதை ‘சுட்டு’
என் நெஞ்சை சுட்டு சென்றது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக