திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஹைக்கூ

கண்ணீர் துளிகள் வற்றும்வரை... 
காலனின் காது எட்டும் வரை... 
காதலின் துயரை உரைத்திடும் 
என்னுயிர்...


உயரம்

களங்கமில்லா இளந்தளிரின் உள்ளத்தில்
எட்டா உயரம் ஏதுமில்லை
கிட்டாதென நினைப்பதில்லை
தொட்டுவிடும் தூரமே வெண்ணிலவும்
உன் உள்ளத்தின் உயரமே அது
பறித்துவிடு..

-சங்கர் நீதிமாணிக்கம்

அப்துல் கலாம்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருநங்கையர்


பெண்ணுமின்றி ஆணுமின்றி
இடைநிலையில் தவிக்கின்ற
மெல்லினமே....
பாசமில்லா உலகத்தில்
பரிதவித்து நிற்கின்றாய்..
நேசத்தை தேடி நீ செல்ல
நிந்தைகள் வருகின்றன..
உயிரியலின் கூறு ஒன்று
உருவற்று போனதாலே
சக்தியாகி மனம் கொண்டு
சிவமாகி உடல் கொண்டு
திசையில்லா உயிராகி
திக்கற்று நிற்கின்றாய்
மணமில்லா மலரென்று
தள்ளுகின்றார்- நல்ல
மனமில்லா மாந்தரெல்லாம்..
வழியின்றி தவிக்கும் நீங்கள்
குற்றமில்லா தெய்வமலர்
சுற்றமில்லா தனிமலர்
ஆணுமில்லா பெண்ணுமில்லா
அர்த்தநாரி என வணங்கும் - உலகு
உயிராகி முன் நிற்க
வார்த்தையாலும் செய்கையாலும்
உறுஞ்சுகின்றர் இன்னுயிரை ...
காணவியலா அர்த்தநாரி கடவுளென
வணங்கும்போது...
கண்முன்னே முன்னிற்க புரியாது
ஜடமாகி தள்ளுவது யார் தவறோ???

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பயணங்கள் - 2

17/08/2015

ஆற்றுப்படுத்தா துயரத்தோடே
என் பயணம் நீள்கிறது...
அணைகட்டி வீழ்ந்துவிடாமல்
அடைபட்டுள்ளது என் கண்ணீர்..

துயரங்களின் எல்லை
நீண்டுகொண்டே இருக்க
தனிமையில் நடப்பதாய் ஒரு மயக்கம்..

அனைத்தும் இருக்கிறது...
அனைவரும் இருக்கிறார்கள..
எல்லாமே அந்நியமாய்...
குறைகூற ஒன்றுமில்லை..

வெளியில் தெரியும் வெளிச்சத்திற்காக
உள்ளுக்குள் எப்படி எரிகிறார்களோ...?
நானறியேன்...

களைப்பின்றி என் பயணம்
தொடர்கிறது...
களிப்புகள் வரும் என்ற
நம்பிக்கை குறையாது...

தவறுகளை திருத்திக்கொள்கிறேன்
என் நம்பிக்கைகளையோ
நம்பிக்கை பார்வையையோ
விடுவதாய் இல்லை..

விடியல் இல்லாமல் போகப்போவதில்லை
எல்லோருக்கும்..
எனக்கும் கூட..

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - சிறு வாழ்க்கை குறிப்பு


Abdul Kalam
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
மரணம்: ஜூலை 27, 2015
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
மரணம்:
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
  • அக்னி சிறகுகள்
  • இந்தியா 2020
  • எழுச்சி தீபங்கள்
  • அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பயணம்

காலமும் கரைந்து போனது
வயதும் கரைந்து போனது
கனவுகளோ
இன்னும் நீர்த்து போகவில்லை...

காலமாற்றத்தில்
பருவமாற்றத்தில்
இலையுதிர்த்த மரங்கள்
தன்னை புதுப்பித்து
கர்வத்துடன்
வேரூன்றி வளர்வது போல்
என் மாற்றங்களை
அனுபவ உரமாக
என்னில் கொட்டி
எந்தன் பயணத்தை
தொடர்ந்துகொண்டே இருப்பேன்......

அழுக்குகளை சேர்க்கும்
சிறு குட்டையாக அல்ல..
எல்லாவற்றையும் சுருட்டி எடுத்து
கடலில் அலசும் ஆறாகவே
என் பயணம் இருக்கும்...

சனி, 15 ஆகஸ்ட், 2015

வேல் தர்மா: சீனாவின் நாணய மதிப்பிறக்கம் நாணயப் போரை உருவாக்கும...

வேல் தர்மா: சீனாவின் நாணய மதிப்பிறக்கம் நாணயப் போரை உருவாக்கும...: சீனா தனது றென்மின்பி நாணயத்தின் பெறுமதியை 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி 1.9 விழுக்காடும் பின்னர் 12-ம் திகதி  1.6 விழுக்காடும் குறைத்து உலக அரங்...

என்னில் உணர்ந்தவை: நாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்

என்னில் உணர்ந்தவை: நாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்: நாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...

என்னில் உணர்ந்தவை: செக்ஸ் கல்வி – எப்படி இருக்கணும்?

என்னில் உணர்ந்தவை: செக்ஸ் கல்வி – எப்படி இருக்கணும்?: லேப்டாப் பார்மட் குடுத்த இடத்துல இருந்து கிடைக்கவே இல்ல. மொபைல்ல பேஸ்புக் வர்றது கடுப்பா இருக்குங்குறதால அதிகமா இன்பாக்ஸ் பக்கம் எட்டி...

யாரும் அடிமையில்லை..

யாருக்கும் யாரும் அடிமையில்லை..
சுதந்திரத்தின் காற்றை
இந்த உலகமே சுவாசிக்கட்டும்..
இனிய வாழ்த்துக்கள்..

விழித்தெழுந்தோம்....
கொதித்தெழுந்தோம்...
அடிமைத்தளை அறுதெழுந்தோம்..
ரத்தம் சிந்தி- ஒரு
யுத்தமின்றி
நம் முன்னோர்
பெற்றுத் தந்த
சுதந்திரமிது....

அடிமை வாழ்வு
களைந்தது - அமைதி
வழி கொண்டு
சாதனைகள்
பற்பல கண்டு
ஏற்றங்கள் நாம்
கொண்டோம்..

வாருங்கள் தோழரே..
பயணதூரம் இன்னும்
உண்டு..

அடிமைத்தாளை அறுத்தாலும்
அடிமை வாழ்வை அறுக்கவில்லை..
அந்நியரை அண்டி வாழும்
வாழ்க்கை இன்னும் முடியவில்லை..

நம்மால் முடியும்
நம்மாலும் முடியும்
நாம்மை விட்டால்
யாரால் முடியும்?

வாருங்கள்...
சுதந்திரத்தில் சூளுரைப்போம்
யாரையும் அடிமை
கொள்ளாமால் இந்த
உலகம்
நம்மை அண்டிவாழும்
வழிவகுப்போம்....

யாருக்கும் யாரும் அடிமையில்லை..
சுதந்திரத்தின் காற்றை
இந்த உலகமே சுவாசிக்கட்டும்..

இனிய வாழ்த்துக்கள்..
69th Independence day Wishes - எவ்வளவு பேருக்கு ஜன கன மன மனப்பாடமா தெரியும் தெரியிலனா - மனப்பாடம் பன்னிக்கோங்க இல்லைனா - அசிங்கம் because it is our National Anthem and meaning in Tamil.
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
தமிழாக்கம்
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

வெற்றியும் தோல்வியும்

Embedded image permalink


இது தான் கபடமில்லா
குழந்தை மனம் என்பது..
சிலையெற்று புரியாது
ஒரு குழந்தையை
தாயிடம் சேர்க்க நினைக்கிறது
இன்னொரு குழந்தை....

Embedded image permalink

ஏழைக்கு பிறந்ததா?

இதோ.. சோர்ந்து கிடக்கும்
ஒரு தாயின் வறண்டு கிடக்கும்
மார்பை கவ்வி அங்கே
அமுதம் கிடைக்காதா என
தேடும குழந்தை செய்த
தவறென்ன?

ஏழைக்கு பிறந்ததா?

யார் தந்தது இந்த வறுமை
உழைக்கும் வர்க்கத்தை
அட்டையாய் உறிஞ்சும்
அதிகார வர்க்கமா?

இயலாமையில் துடிக்கும்
இந்த மக்களை
எதற்கும் மதிக்காத
அரசாங்கமா?

ஒருவேளை உணவிற்குக்கூட
உத்திரவாதம் தரமுடியாத
முதுகெலும்பற்ற
தலைமை எதற்கு ...?


Embedded image permalink



கடவுள்: என்ன வரம் வேண்டும் பக்தன்:1நிலையான வேலை பெட்டி நிறைய பணம் ஏசி ரூமில் சுகமான உறக்கம் க:அப்படியே ஆகட்டும்


Embedded image permalink

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

'வெற்றியை வெளியே தேடாதீர்கள்'

படித்ததில் பிடித்தது

1.       நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னையேயல்ல.

2.       வாய்ப்பு ஏற்படும் போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.

3.       மகிழ்சியைப் போல் ஒரு அழகு சாதனம் அழகிற்கு வேறெதுவுமில்லை.

4.       வாழ்கையின் ஏற்றத்தாழ்வுகளை நிதானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும்.

5.       சுத்தம் உண்மையாக தெய்வீகத்திற்கு அடுத்தபடியானது.

6.       வாழ்கையின் மிகப்பெரிய இலட்சியம் அறிவல்ல செயல்தான்.

7.       தன்னையே தேடும் முடிவில்லாத போக்கே வாழ்க்கை.

8.       அன்பான சொல் மருந்தாகவுமிறிக்கிறது.வாழ்த்தவும் செய்கிறது.

9.       மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.

10.   திருப்தி மாதிரிப் பொக்கிஷம் வேறெதுவும் கிடையாது.

அரேபியா நாட்டுப் பழமொழிகள் - படித்தது
அதிர்ஷ்டம் உள்ளவனை நைல் நதியில் தள்ளினாலும்
அவன் தன்னடைய வாயில் ஒரு மீனோடு வெளி வருவான்.

எனக்கு செருப்புக்கள் இல்லை என்று முணுமுணுத்தேன்
பாதங்களே இல்லாத நம்பிக்கையுள்ள மனிதனைச் சந்திக்கும்வரை.

தன் மனைவியை மதிக்காதவன்
தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.

தகுதிக்கு மீறி செலவு செய்பவன்
தன் உயிரை முடித்துக்கொள்ள கயிறு திரிக்கிறான்.

ஓநாய்க்கு கருணை காட்டுவோர்
மறைமுகமாக ஆட்டுக்குட்டிக்கு தீங்கு செய்கிறார்கள்.

தாயின் செல்லக் குழந்தைகள்
இறுதியில் வெண்ணெய் வெட்டும் வீரராகவே இருப்பர்.

அறிவைத் தேடும் ஒருவருக்கு
தேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக் கொடுக்கின்றன.

நண்பர்களைப் பற்றி நல்லது பேசு
விரோதிகளைப் பற்றி எதுவும் பேசாதே.

குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,
கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.

பணம் பற்றிய பழமொழிகள்: - படித்ததில் ரசித்தது
*பணத்தின் உண்மையான மதிப்பு கடன் கேட்கும் பொழுது தான் தெரியும்.

* பணக்காரன் ஆவதற்கு பணத்தை குவிக்க வேண்டியதில்லை, தேவைகளை குறைத்தாலே போதும்.

* நண்பனுக்கு கடன் கொடுத்தால் நண்பனும் போய்விடுவான் கடனும் போய்விடும்..

* பணம் பத்தும் செய்யும்.

* பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

சில சிந்தனைகள்
* நம்பிக்கையோடு வாழுங்கள்.

* நியாயமான தவறுகளை மறந்துவிடுங்கள்.

* வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும்;
பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

* என்னுடைய நம்பிக்கை என்னும் ஊற்று காயாமல் இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன்.

* முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.

* எதிரியாக இருந்தாலும் பசி தீருங்கள்.

* விழலாம், எழாமல் இருக்கக் கூடாது.
`
`

நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.

பெரியோர்களின் மொழிகள்

1) மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.
`
2) உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.
`
3) நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.
`
4) எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே
`
5) பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி.

அன்னைதெரசா

கஷ்டங்கள் இல்லாமல் வெற்றி இல்லை ----- செனாகா.

தீமையை நன்மையால் வெற்றி கொள் ----- இயேசு.

நம்பிக்கை உண்டானால் வெற்றியும் உண்டாகும் ----- பாரதியார்

செயலாற்றுங்கள், வெற்றி கொள்ளுங்கள் ---- எமர்சன்


சரியான சிந்தனை வெற்றிக்கு வழிவகுக்கும் - போவீ.

பலவீனங்களை நினைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை நம் மீது சில நேரம் பூக்களை வீசும்.
சில நேரம் பந்துகளை வீசும்.
பூக்கள் வீசினால் வைத்து கொள்ளுங்கள்.
பந்துகள் வீசினால் விளையாடி கொள்ளுங்கள்.
பாறாங்கற்களை வீசினால் விலகி கொள்ளுங்கள்.

மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போது
உங்கள் பலங்களை நினைத்து கொள்ளுங்கள்.
மற்றவர்கள் உங்களை புகழும் போது

உங்கள் பலவீனங்களை நினைத்து கொள்ளுங்கள்.

யானையை போல் வாழாதே


ஒருவர் யானையை கட்டி போட்டிருந்த வழியாய் சென்று கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்று தோன்றியது. இவ்வளவு பெரிய யானையை இப்படி சின்ன கயிறால் முன் காலை மட்டும் கட்டி போட்டிருக்காங்களே என்று.செயின் கூட போடலையே என்று. கயிற்றை அறுத்துவிட்டு ஓட இந்த யனைக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று அந்த நண்பர் யோசித்தார். யானைப்பாகனிடம் இது எப்படி சாத்தியம் என்று நண்பர் கேட்டார்.அதற்கு யானைப்பாகன் யானை மிகச்சிறியதாக இருக்கும் போது இந்த சின்ன கயிற்றால் கட்டி போட்டு பழகியது, அதுக்கு அப்பொழுது அதனை அற்றுவிட்டு போக முடியாது. யானை பாவம் அதனையே நினைத்து நம்மால் கயிற்றை அறுக்க முடியாது என்று இன்றும் அப்படியே இருந்து வருகிறது என்றார். இதே மாதிரி நம்மில் எத்தனை பேர் நம்மால் முடியாது,முன்பு முயற்சி செய்தோமே என்று பின்பு முயற்சிக்காமல் இருந்து வருகிறோம். ஏன் ?நாமும் நம்மால் முன்னால் முடியாதை இப்ப முயற்சி செய்து பார்க்கக்கூடாது.


Lesson from elephant : 

“YOUR ATTEMPT MAY FAIL,  BUT NEVER FAIL TO MAKE AN ATTEMPT “

வாழ்க்கை


வாழ்க்கை ஒரு இசைக்கருவி போன்றது. இசைக்கருவி தன்னிலே சூன்யமாய் இருப்பினும் இனிய, ஆழமான, அழகிய இசையை பிரதிபலிக்கும் தகுதி கொண்டது. அதை மீட்டுபவர்களை பொறுத்து இசையின் தன்மை அமையும். அதே போல்தான் வாழ்க்கையும். வாழ்க்கையின் திசையை, அதன் போக்கை நிர்மாணிப்பது நாமே. நம் வாழ்வை சொர்க்கமாக்குவதும், நரகம் ஆக்குவதும் நம் கையில்தான் உள்ளது. அதற்கு நமக்கு உள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி, நம் வாழ்வை மகிழ்ச்சியாக, பயன் உள்ளதாக நாமே உருவாக்க வேண்டும்.

புரிந்துகொள்ளுங்கள் :-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!

நன்றி சொல்லுங்கள் :-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனகுறையை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!

வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு!

சிந்தனைத் துளிகள் - படித்ததில் பிடித்தது


* யாரிடமும் நூறு சதவீதம் நல்லதோ அல்லது நூறு சதவீதம் கெட்டதோ இருக்காது. இரண்டும் கலந்துதான் இருக்கும். நமக்கும் இது பொருந்தும்.
`
* ஒருவன் எத்தனை பேருடன் நட்பு வைத்துக் கொள்கிறான் என்பது முக்கியம் அல்ல. எப்படி நட்பைக் காப்பாற்றிக் கொள்கிறான் என்பதுதான் முக்கியம்.
`
* கோபப்பட்டுத் தாக்குவதற்கும் எதிர்ப்பதற்கும் ஒரு பலம் தேவை என்றால், அமைதியாக இருப்பதற்கும் தாக்காமல் இருப்பதற்கும் இன்னொரு பலம் தேவை. அது மனத்தின் பலம்.
`
* மனம் நல்லதாகவும் தூய்மையாவும் இருந்தால் அதில் ஒரு செளகர்யம் இருக்கிறது. வீண் பயங்கள் வராது.
`
* வெற்றி பெற்றவர்களை மேலோட்டமாகப் பார்த்தால் மட்டும் போதாது. அவர்கள் பெற்ற வெற்றிகளின் பின்னால் எத்தனையோ தோல்விகள் இருக்கும். அவற்றைக் கடந்துவந்துதான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாய் காட்சி அளிக்கிறார்கள்.
`
* அவன் எப்படிப்பட்டவன்? இவன் எப்படிப்பட்டவன்? என்று பிறரை ஆராய்ச்சி செய்யும் மனிதனே! நீ எப்படிப்பட்டவன்? என்பதை மேலே இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ஞாபகம் வைத்துக் கொள்.
`
* மனித உறவுகளில் சிக்கல் வந்தால் சம்பந்தப்பட்ட இருவருக்குமே மனித உறவு பற்றிய விழிப்புணர்வும் படிப்பினையும் தேவை

சிந்தனைத் துளிகள் - படித்ததில் பிடித்தது
****************************************
எதிர்பாராதே அதிகமாய்க் கொடு.

சிந்திப்பதை நல்லதாக சிந்தித்துவிடு
வார்த்தைகளை அளவாக பேசிவிடு.

இழந்ததை மறந்து விடு ஆனால்
அதில் ஏற்பட்ட பாடத்தை மறக்காதே

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விட
தோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிட
வெற்றிபெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமே 
துன்பங்களையும் துயரங்களையும்
மறக்கச்செய்யும் இடம்

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய்
ஆனால்மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை செய்யாதே

ஒருவரை ஒருவர் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். அதில்தான் தவறுகளும், பயனற்ற பிழைகளும் செய்யாமல் தப்ப வழி இருக்கிறது.

அறிவுரை தேடிச் செல்லாதவன் மடையன். அவனது மயக்கம், அவனை உண்மை அறியாமல், குருடாக்கி விடும். அவனைத் தீயவனாய், பிடிவாதக்காரனாய், சுற்றி இருப்பவர்க்கு ஆபத்தானவனாய் ஆக்கி விடும்.

விசாலமான அறிவையும, அனுபவங்களையும், மதிப்பீட்டு அறிவையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லையெனில், நான் ஒரு ஆலோசகன் ஆக முடியாது.

அவசரத்தை நிதானமாக்கு. வாய்ப்புக்கள் வருகையில் சோம்பேறியாய் இருக்காதே. அப்போதுதான் பெரிய பிழைகளைத் தவிர்க்கலாம். முளைவிட்ட நெருப்பு அணைந்து சாம்பலாகும்வரை சும்மா இருந்து விட்டு, அப்புறம் ஊதிக்கொண்டிருப்பவனைப் போல் இராதே.

கடந்து போனவைபற்றி எண்ணி நம்பிக்கை இழந்து விடாதே. திரும்பி வராதவைகளுக்காக அழுது புலம்புவது மனித பலவீனம். நேற்று என் செயல்களுக்கு வருந்தினேன். இன்று நான் என் பிழைகளையும், தீமைகளையும் புரிந்து கொள்கிறேன். அத்தோடு என் நடுக்கத்தையும் அழித்து விட்டேன்.
`


நன்றி: கலீல் ப்ரான், ஞானிகளின் தோட்டம்.

படித்ததில் பிடித்தது

ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
`
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
`
மீள முடியாத பந்தம் -------- பாசம்
`
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
`
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
`
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
`
வாழ்க்கையில் இருக்கக் கூடாதது --------------- எதிபார்ப்பு
`
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
`
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
`
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
`
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
`
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
`
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

சிந்தனை....
தெரியும் தெரியும் என அலட்டிக்கொள்ளாதே
பின் எதையும் தெரியாமல் போய்விடுவாய்.
`
தினம் இல்லை என்று கூறினால்
எதுவும் இல்லாமல் போய்விடும்.
`
மனதில் கஷ்டம் வந்தால் உன் நண்பரிடம்
கூறிவிடு மனது லேசாகிவிடும்.
`
உள்ளத்துக்கு ஆசை கொள்
உடலுக்கு ஆசை கொள்ளாதே.
`
உன்னை ஒருவன் ஏமாற்றினால்
நீ இன்னொருவரை ஏமாற்றிவிடாதே.
`
எதையும் எதிர்பார்த்து ஏமாறுவதை விட.
எதிர்பார்க்காமல் வாழ்ந்துவிடு.
`
கிடைக்கும் என்றால் ஆசைகொள்
கிடைக்காதென்றால் விட்டுவிடு.
`
முகத்தை அழகு படுத்தாதே
உள்ளத்தை அழகு படுத்திக்கொள்.
`
உண்மையுள்ள அன்பை நீ காட்டு
இறைவனின் அன்பு உனக்கு கிடைக்கும்.

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.

ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

Wedding Pass Book - படித்ததில் ரசித்தது


நிஷா, நிர்மல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.திருமண நாளன்று நிஷாவின் அம்மா ரூபாய் ஆயிரம் பணம் போட்டு ஒரு பேங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து பாஸ்புக்கை பரிசாக கொடுத்தார்கள்.கொடுத்துவிட்டு நீ எப்பொழுதெல்லம் மகிழ்ச்சியாக இருக்கிறாயோ அப்போதெல்லாம் பணம் உன் அக்கவுண்டில் டெபாசிட் செய்து விடு என்று சொன்னார்கள். இந்த செய்தியை நிர்மலிடம் தெரிவித்தாள் நிஷா. நிர்மலும் ஒப்புக்கொண்டான்.

அடுத்த டெப்பாசிட் செய்ய இருவரும் காத்திருந்தார்கள்.

நிர்மலின் பிறந்த நாள் வந்தது,ரூ.100

நிஷாவின் சம்பள உயர்வு - ரூ.500

இருவரும் சுற்றுலா சென்றார்கள் -ரூ.200

நிஷா தாய்மை அடைந்தாள்- ரூ.2000

நிர்மலின் ப்ரமோஷந் ரூ.1000

இப்படி பல சந்தோசமான நேரங்களீல் அவர்கள் டெப்பாசிட் செய்து மகிழ்ந்தார்கள்.

சில,பல வருடங்கள் கழிந்தன. சண்டை,சச்சரவு,வாக்குவாதம் என்று வாழ்க்கை கசந்தது. நிஷா தன் அம்மவிடம் இருவருக்கும் ஒத்து வராது பிரியப்போகிரோம் என்றாள். அதற்கு அவள் அம்மா வெட்டிங் பாஸ்புக்கில் உள்ள பணம் எல்லாம் எடுத்து இருவரும் செலவழித்துவிடுங்கள் அப்புறம் பிரியலாம் என்றார்கள்.

நிஷாவும் பணம் எடுக்க பேங்க் சென்றாள். வரிசையில் நிற்கும் போது பாஸ் புக்கை சரிபார்த்தாள். சந்தோசமான மனம் மாறினாள். வீட்டிற்கு திரும்பினாள். வந்து நிர்மலிடம் பாஸ் புக்கை கொடுத்து செலவு செய்யும்படி சொன்னாள். நிர்மலும் பேங்க் சென்று திரும்பி வந்தான்பாஸ் புக்கை நிஷாவிடம் திரும்பி கொடுத்தான்.ரூ.5000 டெப்பாசிட் செய்து பாஸ் புக்கை கொடுத்தான். நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறோம் என்று நினைத்து மனம் மாறி இருவரும் மனம் ஒத்து வாழத் தொடங்கினார்கள்.

பணம் என்பது பெரிதல்ல. ஆனால் பழைய நினைவுகளி அசைபோட இது ஒரு காரணமாக இருந்தது.


நாம் எப்போதாவது பிரச்சனயினால் கீழே விழ நேர்ந்தால் அதனை சரி படுத்த பார்க்கவேண்டும்,தப்பிக்க முயலக்கூடாது.

சிந்தனைத் துளிகள் **

நேரம் ஒதுக்குங்கள்
1. சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
------------------- அது துன்பத்தைப் போக்கி இதயத்திற்கு இன்பம் அழிக்கும்.

2. சிந்திக்க நேரம் ஒதுக்கினால்
------------------- ஸெயலாக்கத்திற்கு புது சக்தி உங்களிடம் உண்டாகும்.

3. படிப்புக்கு நேரம் கொடுங்கள்
------------------ அது பண்பை வளர்த்து பகுதறியும் தன்மையை வளர்க்கும்.

4. உண்ணவும் நேரம் ஒதுக்குங்கள்
------------------ அது எளிமையான ஜீரணத்துக்கும் நோயற்ற வாழ்வையும் வழங்கும்.

5. உறங்கவும் நேரம் ஒதுக்குங்கள்
------------------ இதன் மூலம் சிந்தனையை சீராக்கி உற்சாகத்தை அதிகரிக்க முடியும்.

6. பிறருடன் பழக நேரத்தை செலவிட்டால்,
------------------ அறிவு வளர்ச்சி அதிகமாகும்.

சிந்தனைத் துளிகள்
ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

கேட்டதை நம்பாதே பார்த்ததை நம்பு.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

இருப்பதைச் செலவு செய்யாதே
முதியோரானபின் உன்னைக் காப்பாற்ற உதவும்.

பொறுமை கசக்கத்தான் செய்யும்
ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்

கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும்
உண்மைகளை கண்டு வாழ்த்தவேண்டும்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

மதத்தை விட மனதை கண்டுகொள்ள

முயற்சி செய்தால் பிரிவினை என்பது கிடையாது.