வெள்ளி, 28 அக்டோபர், 2011

கேள்விக்குறி


கேள்விக்குறியாய்
அமைந்த காலம்
எதிர்காலம்.....!


வேலையில்லா
இளைஞர்களின்
எதிர்காலம் - 
தண்டச்சோறு
பட்டத்துடன்.....
கேள்விக்குறி....?


வரதட்சணை
பணமில்லா பெண்ணின்
எதிர்காலம் -
வீணாய் கழிவதுடன்....
கேள்விக்குறி....?


ஏறும் விலைவாசியில்
நடுத்தரவர்க்கத்தின்
எதிர்காலம் - 
சமாளிக்கும்
பயத்துடன்....
கேள்விக்குறி...?


தேர்தலில்
அரசியல்வாதிகளின்
எதிர்காலம் - 
வெற்றி வாய்ப்பு
தவிப்புடன்....
கேள்விக்குறி.....?


கேள்விக்குறியாய்
அமைந்த காலம்
எதிர்காலம்.....!


வியப்பிற்குறியது....!
வேதனைக்குறியது....!
கெள்விக்குறி
மறைய உழைக்கத்
தூண்டுவது.... 

மேகம்


இவ்வளவு நாள்
நீ அழுது
எங்களை
மகிழச்செய்தாய்....


இப்பொழுதோ
உன் சிரிப்பை
விண்மீனாய்...


எங்களை
கண்ணீர் வடிக்க
வைக்கிறாய்....


எங்கள் கண்ணீரில்
என்ன பலனை
நீ
காண்கிறாய்.....?


உன் கண்ணீரோ
எங்களின்
துக்கத்தை
தீர்க்கிறது.....


இப்பாரினில்
பசுமை புரட்சிக்கு
வித்திட்டு
உதவுகிறது....


உபயோகமில்லா
எங்களின்
கண்ணீரை நிறுத்தி....


மேகமே
நீ
கண்ணீர்
விடு....

கோழையா நான்?


கொடையாளியாக
இருக்க
விரும்பினேன்


கொடுக்க 
பணமில்லை.....


கொலையாளியாக
மாற
நினைத்தேன்


செய்ய 
தைரியமில்லை.....


யாசகம்
பெற
யோசித்தேன்


மானமெனைத்
தடுத்தது.....


மறக்க 
முயற்சி
செய்தேன்


மறக்க
முடியவில்லை....




தற்கொலை
செய்துகொள்ள
எண்ணினேன்


அவ்வளவு
கோழையா
நான்.....?

திருந்துவார்களா?



ரோஜா இதழென 
இருந்த அவள்
இன்று


வரதட்சணை என்னும்
சூறாவளியால்
வாடுகிறாள்


இச்சூறாவளி சென்ற
இடமெல்லாம்
ஸ்டவ் வெடிக்கிறது


மருமகள்
கொளுத்தும் போது
மட்டும்....


ஏன் அது
மருமகள்
கொளுத்தும் போது
மட்டும்....


அவளின் விலையில்லா 
உயிரை
விலையாகப்
பெற்று 
மற்றவர் பற்றி 
எண்ணாமல்.....


இக்கொடுமைகள்
அனைத்தும்
நம்
பாரத மண்ணின்
சாபமா?

துணை புரிவாய்

தமிழே.....!

தரணியில்
தழைத்தோங்கும்
தேனாறே...

வெள்ளத்தின்
ஓட்டம் போல்
பெருக்கெடுத்து
செல்லவும்....

எண்ணிலா 
மழைத்துளிகள் போல்
என்றுமில்லா
இனிமையுடன்
இறையவும்...

என் மனதில்
தென்றலென 
இனிமையுடன்
வந்து...

கவிதை எனும்
கற்கண்டை
காண 
துணைபுரிவாய்...

விடை என்ன?


ஏ.. நெருப்பே ..
ஏன் 
எரிக்கிறாய்?


ஏதும் அறியா
அப்பாவி
பெண்களை.....


மாமியார்
கணவர்
அருகே நிற்க


மருமகளை
மட்டும்
ஏன்
எறிக்கிறாய்?


ஓ.. மண்ணெண்ணெய் 
லஞ்சம் 
மயக்கி 
விட்டதா உன்னை?

காலை


கதிரவனுடைய 
வரவைக் கொண்டு
இருளை விரட்டி 


விடியற்காலை
பறவைகள் இன்பமாய்
கூவிட


உறங்கும் மாந்தர்
சுகமாய் எழுந்து
தமது கடமை ஆற்றிட


களைப்பை போக்கி
கவலைகள் மறந்து
கவினழகு கான


காலையே...!
வருக....

மனநிறைவு


ஓ.. மலரே ...!
உயிர் பிரிகிறதே 
என் ஏக்கமா?


பரவாயில்லை 
மனநிறைவு  கொள்....


சில நிமிடங்கள் 
சிந்தனை செய்
காரணம் தெரியும் ...


உந்தன் உயிரின் 
இறுதி மூச்சு
இனிய மணமாய் ...


மக்கள் மனம் 
மகிழச் செய்கிறது ....


மனநிறைவு கொள்

வியாழன், 27 அக்டோபர், 2011

எழுவோம்


இல்லாதவனுக்கு 
இளகிய மனது
இருப்பவனுக்கு 
இரும்பு மனது


கொடுக்க மனமிலா
செல்வனுக்கு
கோடி கோடியாய்
சொத்து


உழைத்து வாழும்
ஏழையோ
வானமே கூரையாய்
வாழ்கிறான்


சுதந்திர நாட்டில் 
அடிமையாய்
சோர்ந்து கிடக்கும்
ஏழை மனிதனின்
அடிமைத் தளையை
அறுத்து எறிந்திட


ஆறுதல் செய்து
அவர்களை தேற்றிட
செல்வனின் அகந்தை
நெருப்பு அழிந்திட


அருவிபோல் பாய்ந்து 
அனைவரும் எழுவோம்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

பயன் என்ன ?


விவேகம் இல்லா
விஞ்ஞானம்

ஆபத்திற்கு உதவா
பிள்ளை

அரும்பசிக்கு உதவா
அன்னம்

தாகத்தைத் தீரா
தண்ணீர்

தரித்திரம் அறியாப்
பெண்டீர்

பாவத்தைத் தீரா
தீர்த்தம்

கோபத்தை அடக்கா
அரசன்

குருமொழி கொள்ளாச்
சீடன்

அருவிபோல் எழுவோம்


இல்லாதவனுக்கு 
இளகிய மனது
இருப்பவனுக்கு 
இரும்பு மனது


கொடுக்க மனமிலா
செல்வனுக்கு
கோடி கோடியாய்
சொத்து


உழைத்து வாழும்
ஏழையோ
வானமே கூரையாய்
வாழ்கிறான்


சுதந்திர நாட்டில் 
அடிமையாய்
சோர்ந்து கிடக்கும்
ஏழை மனிதனின்
அடிமைத் தளையை
அறுத்து எறிந்திட


ஆறுதல் செய்து
அவர்களை தேற்றிட
செல்வனின் அகந்தை
நெருப்பு அழிந்திட


அருவிபோல் பாய்ந்து 
அனைவரும் எழுவோம்

அறிஞர் அண்ணா


அச்சம் தவிர்த்திடுக
நவநிதியம் தந்திடினும் 
நந்திக் கிடக்க 
இசையாதீர்
வாய்மைதனைக் 
காத்திடும் வன்மை
பெற்றிடுக
அதற்காக 
நெருப்பாற்றில்  
நீந்திடவும்
துணிந்திடுக

வெள்ளி, 21 அக்டோபர், 2011

தமிழின் நீதி நூல் வரிகள்



கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்: ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்!

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கதனை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


வருந்தி அழைத்தலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா இருந்தோங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.


நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலனக் கலகலெனப் புதல்வர்களைப் பெருவீர்
காப்பதற்கும் வழியறீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே!

அனைத்து வரிகளும் தமிழின் நீதி நூல்கலிள் இருந்து எடுத்த மிகப் பிரபலமான நீதி வரிகளாகும்


நன்றியுடன்

சங்கர்

காதல்


காத்திருந்தேன் நான்
உன்னைப் பார்த்திடவே
நேரம் கறைந்தது எப்படி
என்றே தெரியவில்லை!
நேற்றிருந்த கோலமின்று
மாறியது!
காதலியே மனைவியானால்!
இன்றோ சூழ்நிலைகள்
மாறவில்லை!
ஆனாலும் காத்திருக்க
முடியவில்லை
 ஏனெனில்
நேரமோ எனதில்லை.