நாட்கள் நகர்ந்து
கொண்டிக்கின்றன
நகராமல் தொடர்கின்றன
நினைவுகள்
பூக்களாய் மலர்ந்த
புரியாத பொழுதில்
பிரிந்துவிட்ட இதழ்களாய்
விடுபட்ட நம் கரங்கள்..
புன்னகைக்கும் சில உள்ளங்களின்
சாந்தத்திற்கு
பிரிவினை துக்கம் கொண்டாடுவது
நாம்
போகட்டும் விட்டுவிடுவோம்
பொறுத்து பார்த்துவிடுவோம்
தூரங்கள் இருக்குமிடமன்றி
உள்ளங்கள் உள்ளுக்குள்ளே..
பொறுமைகள் வென்றுவிடும் எந்நாளும்
உண்மைகள் தூங்கிவிடாது..
நமது துயரங்களின் வடுக்கள்
புரிந்துவிடும்.
பேரன்பின் பேரெழிலாய்
நீயிருக்க.
பொங்கிவரும் பெருவெள்ளம்
பருகிவிட்ட அருட்கடலாய்
உன் மொழி தெறிக்க
ஆடிவரும் எதிர்ப்பலைகள்
அடங்கி விடும்
பொறுத்தாலும் நினதன்பால்..
சாரலாய் பொழிகின்ற
உன்கருணையில்...
தீயும் தலை வணங்கி
மண்டியிடும்
தீர்க்கமான நின்
அன்பின் முன்னே
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக