கைகளில் ஆயிரம் நோட்டுக்கள்
அளவில்லாமல் இருந்தும்
பசிக்கு அழும் குழந்தைக்கு
படி பால் வாங்க முடியாமல்
இருந்தும் இல்லாது
தவிக்கும் நிலை தந்தைக்கு..
செல்ல குழந்தை ஆசைப்பட்ட
சின்ன கரடி பொம்மை வாங்க
சிறுக சிறுக சேர்த்த பணம்
பெய்தடித்த பெருமழையில்
அடித்து சென்றதில்
திகைக்கும் தந்தையும்..
இருப்போரும் சரி..
இல்லாதோரும் சரி..
எதோ ஒரு நிலையில்
எதோ ஒரு சூழலில்
ஒரு தந்தையாய் வரும்
தவிப்பையும் திகைப்பையும்
சந்திக்காமல் போவதில்லை..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக