திங்கள், 14 நவம்பர், 2016

நினைத்தேன் வந்தாய்...


செல்லும் பாதை எல்லாம் நிறைந்திருந்தது..
நன்மையையும் தீமையும்
இன்பமும் துன்பமும்
நட்பும் துரோகமும்
நாணயமும் நம்பிக்கை மோசடியும்
அந்த பாதை போலவே
ஏற்ற இறக்கம் கொண்டு
அந்த பாதை போலவே
மென்புல்வெளியும் முட்களும் சேர்ந்து
இணைபிரியா ஏக்கங்களும் ஏமாற்றமும்...
கூடவே மெல்ல தோளமரும்
நினைவுப்பட்டாம்பூச்சிகளில் நேசமும்
சிலிர்க்க வைக்கும்
மணித்திவளைகளில் சொட்டிச்செல்லும்
இன்பங்களும் சாரலும்..
எல்லாம் இருக்கட்டும்..
நானும் இருப்பேன் என்றே..
நெஞ்சுக்குள் சாரல் வீச..
“நினைத்தேன் வந்தாய்”
கனவுகளில் இனிமைகளே....


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: