பாடம் சொல்லும் புத்தகத்தில்
பாடம் பண்ணிய பட்டாம்பூச்சி..
சிறகடித்த பட்டாம்பூச்சியை பிடித்து
சிறையிட்டது மனிதம்..
முறிக்கப்பட்ட சிறகோடு
புரட்ட புரட்ட படிக்க முடியாத
மனித மனங்களில் கற்பனைகள்..
எண்ணங்களை சிறையிலிட்ட
வண்ணங்களில் தோழி
இந்த பட்டாம்பூச்சியோ
கண்ணீரோடு மெல்ல சொல்லுது.காதில்.
இந்த புத்தக சுமையை என்னால்
சுமக்க முடியவில்லையே..
முள்ளாய் நினைவுகள் மனதில்..
பொதிமாடாய் புத்தகம் சுமக்கும்
சிறகிழந்த பட்டாம்பூச்சி குழந்தைகள்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக