செவ்வாய், 1 நவம்பர், 2016

இயற்கையை வாசிக்கிறேன்


ஆலமரத்தடியில் ஆடிப்பாடி
மகிழ்ந்த நாட்களும்...
ஏரி குளங்களில் நீந்தி
களித்த நாட்களும்....
தடைகளைத்தாண்டி மலை உச்சி
தொட்ட நாட்களும்...

வயல்களின் ஊடே நடந்த
பசுமையான நாட்களும்...
மூச்சு முட்டாத காற்றும்
முகம் சுளிக்காத மணங்களும்
எல்லாமே இழந்துவிட்டேன்...

நெகிழிகளின் குப்பையில்
கார்பன்களின் புகையில்
மரங்கள் அருகிய கான்க்ரீட் காட்டில்
எல்லாம் தொலைத்து தேடுகிறேன்..

வாசிக்காத புத்தகமாய் இருந்த இயற்கை
மனிதன் கரம் பட்டு கசங்கிய மங்கையாய்

சொல்லாமல் கற்றுத்தந்தது..
எல்லையில்லா பால்வெளியில்..
காற்றின் திசையையும்..

காடுகளில் செழிப்பில்
கதிரவனின் கனப்பில்
வானத்தின் மதமதப்பில்
மண்குளிரும் மழைவளத்தையும்..

திசைக்கொன்றாய் வெட்டியா மரத்தால்
காற்றின் திசைக்கொன்றாய்..

மானுடமே..
நீ விழித்தெழாத நாழிகையில்
செத்துக்கொண்டு இருக்கிறது இயற்கை..
நீ செயற்கையின் மோகத்தில்
மயங்கிக்கிடக்கையில் கயவர்கள்
களங்கப்படுத்திய கன்னியாய்
சீரழிக்கப்படுகிறது இயற்கை..

இயற்கையை நேசித்து
இயற்கையை சுவாசித்து
இயற்கையை பூசித்து
இயற்கையை வாசி..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: