பார்வைகள் மாறுபட்டது..
வார்த்தைகள் வேறுபட்டது..
எண்ணங்களில் தோன்றாத வடிவமாய்
எல்லாமே தலைகீழானது..
எல்லாம் இருக்கிறது
ஏனோ
கையில் எதுவுமில்லை..
எல்லாம் இயங்குகிறது..
ஏனோ
ஆழ்ந்த மௌனத்தில்..
இல்லாதோர் என்றைக்கும் போல
மகிழ்ச்சியாய்..
நடுத்தரங்களோ சிலநாள் பொழுது
எப்படி என்ற கேள்வியில்...
எய்ப்பவர்க்கு எப்போதையும் போல
இதுவும் ஒருநாள்..
கள்ளவியாபர கையூட்டு
கறுப்புப்பண ஊழல் பேர்வழிக்கு
இருக்கிறது நாட்கள்..
யோசித்து வழி கண்டுபிடிக்க...
உடல் உழைத்து...
மெல்ல மெல்லவும்
சிறுக சிறுகவும் சேர்ந்த
அறியாதோர் நெஞ்சோ பதற்றத்தில்..
எவ்வளவு போகுமோ?
எப்படி போனால் என்ன..
செல்லாத நோட்டாய் வாழும்
சிலரின் வாழ்க்கையில்
எந்த மாற்றமும் இல்லை
இந்த செல்லாத நோட்டால்...
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக