வெள்ளி, 11 நவம்பர், 2016

நனையாத குடை..


கக்கத்தில் பத்திரமாய் இருக்கும்
அந்த குடை..
வெயிலோ..மழையோ..
என்றைக்கும் இடம் மாறாது...
வீட்டை விட்டு கிளம்பினால்
கக்கம் விட்டு பிரிவதில்லை..
அவரின் அடையாளமாய் மாறிப்போனது..
பலரின் கேள்விக்கு வெறும்
சிரிப்பே பதிலாய் சொல்லுவார்....
கிராமத்துமணம் மாறாத
பட்டிணத்தார்..
கக்கம் அகலாத அந்த குடை
விரிந்து பார்த்தது இல்லை..
வெயிலிலும் காயாது..
மழையிலும் நனையாது..
காரணம் கேட்க..
அப்பாவியாய் சொன்னார்..
பட்டணம் வந்து சம்பாரித்து
மொதமொதல்ல வாங்கினது..
கசங்காத நினைவுகள் போல
நனையாத குடை..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: