கரிசக்காட்டு கண்மணியே...
காவக்காரன் பொன்மயிலே..
ஆடிப்பட்டத்திலே தேடி வெதச்சுவச்ச
பருத்தி பஞ்சாட்டம் வெடிச்சி நிக்கிறே
அத்தமக ராசாத்தி என்னுசுரு நீயாச்சு..
எசப்பாட்டு நா எடுத்து என்மனச சொல்லவந்தேன்
புதுப்பாட்டு நீ தொடுத்து பூமனசில்
தேனெடுத்த..
என் ராசாவே உன்ன நம்பி குத்தவச்சு
காத்திருக்கேன்
எடம் மாறி தடம் மாறி என்ன விட்டு
போகாதே..
எட்டுவீட்டு கல்லுக்காரி காசுகாட்டி
ஆசைகாட்ட
பள்ளப்பட்டி ஆட்டக்காரி ஆடயிலே என்ன
சுருட்ட..
ஆசப்பட்டு அள்ளிக்கொள்ள எல்லாரும்
துள்ளயிலே
பாசக்காரி உன்னைவிட்டு பாவி நெஞ்சம்
போயிடுமா..
பதறாத பதறாத பண்ணவீட்டு மச்சிமேலே
உனக்காக காத்திருக்கேன்
ஒருத்தருக்கும் தெரியாம
ஓடிவந்து அணச்சுக்கடி...
ஏ..எடுபட்ட பாவி மச்சான்..
ஒருத்தருக்கும் தெரியாம ஓடிவர
நா சொந்தங்கெட்ட சிறுக்கியில்ல
பட்டு துணி இருந்தா பாரு... இல்ல
பவிசான வெள்ளைவேட்டி சுத்திகட்டி
நீயும்
பரிச தட்ட பலரோட எடுத்துவந்து
பேசி முடிச்சுடுபுடு..
மஞ்சத்தாலி கட்டிபுடு..
மாங்குருத்தா நா வாறேன்..
மல்லியப்பூ கட்டிலிலே
மன(ண)ம் போல வெளையாடு..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக