“ம்ம்..”
என்று வலியில் முனங்கினாலும்
“நானும்”
தான் “நெஞ்சுருகி”
பேசுகிறேன்..
“புயலாய்”
வீசிய உன்னுடைய கோபத்தில்
கரைந்து
போனது எல்லா “நேசம்”..
“உதவி”
கேட்டு “அதிகாலை” உறக்கத்தில்
எழுப்பிய
கூக்குரல்
யாருடைய
செவியையும் எட்டவில்லை..
யாரும் உன்
பிரதிநிதியாக
என்னை
பார்க்கவும் இல்லை.
இதோ
வாகனத்தில் செல்கிறது
என் கடைசி
பயணம்..
பூத்திருக்கும்
“ரோஜா”க்கள்
எனக்காய் “இறைவனின்”
சந்நிதியில்
தன்னுடைய
பிரார்த்தனையை
வைக்கட்டும்..
மீண்டும்
ஒருமுறை பிறக்கும்போது
நீ அன்பாய்
என்னில் வாழவேண்டுமென்று...
சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக