ஓரப்புன்னகையில்...
ஒற்றை வரியில்..
சொல்லிய வார்த்தையில்..
அவள் கன்னங்கள் சிவந்தது..
“ஹேய்.. நீ ரொம்ப அழகா இருக்க”
கவிதையை படித்து சிரித்துக்கொண்டே தன் கணவனைப் பார்த்தால் நித்யா..
நித்தியமல்லியைப் போல மலர்ந்திருந்த அவள் முகம் கண்ட வேந்தன்,
“என்ன நித்யா” ஒரே ஏகாந்த புன்னகையா
இருக்கு.. என்ன விஷயம்.. எனக்கும்
சொல்லிட்டு சிரியேன்” என்றான்.
“ஒன்னுமில்லைங்க” என்றால் சிவந்த கன்னங்களை காட்டி....
அதை பார்த்த வேந்தன், “அப்ப என்னவோ இருக்கு” எனக்கும் சொல்லேன் என்று
கொஞ்சும் தொனியில் கேட்டான்.
“இல்லை... ஒரு கவிதை
படிச்சேன்” உடனே நீங்க நம்ம கல்யாணம் ஆனா புதுசுல சொன்ன ஒரு கவிதை ஞாபகம் வந்தது..
அதை நெனச்சதும் சிரிப்பு வந்தது என்று சொல்லி ஒரு வெட்கப்பார்வை பார்த்தால்..
“ஓ.. அதுவா! ம்ம்.. அந்த கவிதை உனக்காக நானே ரொம்ப யோசிச்சு எழுதினது
செல்லம்... என்று ஒரு மோக பார்வையில் நித்யாவை நோக்கினான் வேந்தன்..
“போதும்... போதும்.. கொஞ்சம் ஆரம்பிச்சா... உடனே “அந்த” ஞாபகம்
வந்திடுமே..என்று சொல்லி விலகிப்போக முயன்றவளை இழுத்து அணைத்தவன் அவளின் இதழ்களில்
விரலால் மெல்ல கொடு போடும் வகையில் ஓவியம் வரைந்து அவள் காதில் மெல்ல “அந்த
கவிதையை” மீண்டும் படிக்க...
“ச்சீ... போங்க” என்று வெட்கத்தில் சிவந்த கன்னங்களை அவனின் உதடுக்கு
பரிசளித்து அவனை இழுத்து அணைத்துக்கொண்டால்..
கதை அவ்வளவு தாங்க.....! என்ன கேட்கறீங்க....?. அந்த கவிதை எதுன்னா?..
அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்க.. அதை எல்லாம் கேட்டுக்கிட்டு... போங்க.போங்க...
இன்னும் இங்க என்ன வேடிக்கை.. அவங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக