இருளென்று
பகலென்று வையத்து வான்நிகழ்வு
சுற்றும்
பூமியினால் வந்ததிங்கு..
உண்மை
உறங்கிக்கொண்டு இருக்கும் வேளையிலே
பொய்யொன்று
சுற்றிவரும் வாழ்க்கையிலே காண்கின்றோம்
இன்மையென்றும்
மறுமையென்றும் ஆன்மிகம் சொல்லி
எழுதி
வைந்தார் வாழ்க்கையை..
கடவுளுக்கே
போலி என்று சாத்தனை
உலவவிட்ட சதிகார
உலகமிது..
நாணயத்தின்
இரு பக்கமாய்
நம்மை
நடமாட விட்டதிந்த உலகம்
ஒருவன்
நல்லவனா கெட்டவனா?
நிர்ணயிப்பது
யாரென்று தேடுகிறோம்..
நல்லவனும்
கெட்டவனே சிலருக்கு..
கெட்டவனும்
நல்லாவே சிலருக்கு..
பார்வைகள் தருமே
தீர்ப்பு..
பன்முக
உறவு கொண்டோம் நாமே..
இருமுக
உள்ளம் கொண்டோம் அங்கே..
போலியாய்
புன்னகைத்து போலியாய் வாழ்த்து சொல்லி
ஒரு
முகத்தை காட்டி நிற்கையிலே
மறுமுகமோ
மனதிற்கும் வஞ்சனைகள் கொண்டு
வார்த்தைகளை
மெல்ல துப்பும் வசீகரம் பூசி..
எண்ணங்களே
வாழ்க்கை என்றார்.ஆன்றோர்.
நாமோ
வண்ணங்களே வாழ்க்கையாய்
இருமுகம்
கொண்டு இங்கே சுற்றி திரிகிறோம்....
சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக