எங்கும் நிறைந்திருக்கும்
ஏகாந்த திருவுருவே..
மனதில் கொண்டிருக்கும்
நினைவின் மாசறு பொன்மணியே...
உயிர்களின் உயிர்களாய்..
ஊனுக்குள் உணர்வாகி..
உலகாளும் திருவாகி..
இயற்கையிலே கலந்து நிற்கும்
எனையாளும் பெருந்தகையே..
காணுமிடமெல்லாம் காணாது நிற்கின்றாய்..
விரிவானம் முழுவதும் கலந்தே நிற்கின்றாய்..
வீசும் காற்றினிலே கலந்தே நிற்கின்றாய்..
பேசும் வார்த்தையிலே ஒலியாய் நிற்கின்றாய்..
அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமாகி நிற்கின்றாய்..
உணர்ந்துகொள்ள உள்ளிருப்பாய்..
உணராமல் வெளியிருப்பாய்..
பார்வையில் நீ பேரொளியாய்..
பரவசமாய் நிறைந்திருப்பாய்..
நீயன்றி உலகத்து..
நீயின்றி உயிரேது
நீயின்றி உணர்வேது..
என்னில் கலந்திருக்கும் உயிர்மூச்சே
எனையாளும் இறையே..
நினைவெல்லாம் நீதானே..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக