"நினைவெல்லாம் நீதானே"
நீண்டுக்கொண்டே இருக்கும் பயணத்தில்
நீங்க நினைவாக நீ தானே..
உள்வாங்கும் மூச்சுக்காற்றில் வரும்
பிராணவாயு நீயாக இருக்கையில்
உன்னை தானே என் குருதியில் குழைத்து
உயிராய் வாழ்கிறேன்..
எந்த நினைவுகளும் இல்லாமல் - ஆழ்ந்த
தூக்கத்தில் இதயம் ஒவ்வொரு முறையும்
துடிப்பதும் உனக்காக தானே..
காதோரம் கொஞ்சி பேசினாலும்
கதவோரம் நின்று கண்ஜாடை காட்டினாலும்
கனவென்றே ஆனாலும்
என் நினைவெல்லாம் நீதானே..
ஈர்க்கும் புன்னகையில் அடுக்கி வைத்த
வைரமென மின்னும் பல்வரிசை..
கோர்க்கும் பார்வை சொல்லும் - பாவை
உந்தன் அன்புமொழி..
நீங்காது நீங்காது திரும்பாத
பயணம் செல்லும் காலத்திலும் நீங்காது
அழிகின்ற உடற்செல்லில் அழியாத வார்த்தையாக
மூச்சோடு கலந்து..
மனதிலே நிறைந்து...
என்னிலே மறைந்து..- இருக்கும்
நினைவெல்லாம் நீதானே..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக