கனவுகளை சுமந்த நேரத்தில்
கற்பனை ஊற்றெடுக்க புன்னகையில்
இசையாய் வந்தது உதட்டில் விசில்..
மழை மேகம் சூழ்ந்திருக்க
மகிழ்ந்து நடக்கையிலே
சில்லென்ற தூறல் வந்து
தேகம் தீண்ட
மெல்ல நடந்துகொண்ட
உள்ளத்தில் உதடுகளின் விசில்..
சோகங்களை சுமந்தால் என்ன..
வலிகளில் அழுதால் என்ன..
கானம் தருமே இதம்..
கூட வருமே கண்ணீரோடு
விசிலடிக்கும் உதட்டின் கானம்..
சங்கர் நீதிமாணிக்கம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக