வலிகள் இல்லாத வாழ்க்கையா?
ஏக்கங்கள் இல்லாத மனமா...
கொட்டிக்கிடக்கிறது கோடி கோடியாய்..
தனிமையில் தவித்த இளமை...
துக்கத்தில் சாய தோளில்லாத துயரம்..
பாராட்டுக்கு ஏங்கிய மனதுக்கு கிட்டாத
தழுவல்..
தந்தைக்கு பின் பாரம் தாங்கிய
தோள்களில்
இன்னும் தீராத வலிகள்.....
எட்டிப்பிடிக்க ஏணியில் ஏற..
தட்டிப்பறிக்க தடம்பற்றி வரும் பகைமை..
நம்பிக்கையை நாசம் செய்யும்
நல்லவர்கள் தான் நான் கண்ட சிலர்...
ஆனாலும் கண்டுகொண்டேன்
தாங்கிப்பிடித்து
தோள் கொடுக்கும் பற்பல நல்லுள்ளம்..
தாங்கி பிடித்தார்கள்..
தாங்கி பிடிக்கிறார்கள்..
தாங்கி பிடிப்பார்கள்..
தீராத நம்பிக்கை தீராது என்றென்றும்..
தனியனாய் வந்தேன்..
எனக்கென எதுவுமில்லை..
விருப்பங்களை தொலைத்து விட்டு
வேதனையில் தவித்தாலும்..
இருக்கவே இருக்கிறது
எதுவந்தால் எனக்கென்ன..? (Take it easy policy)
என்னில் நிறைந்திருக்கும் ஏமாற்றங்கள்..
என்னை வீழ்த்தி நிற்கும் துரோகங்கள்..
ஆழ்மனதை துளைக்கும் அலட்சியங்கள்..
விட்டுவிட முடியவில்லை மாற்றாரை போல..
வெள்ளந்தி என்று சொல்லி தப்பி செல்லவுமில்லை..
இரக்கம் கொண்ட நம்பிக்கையில் ஏமாந்தேன்
இதுதான் உண்மை..
இன்றைக்கும் தவிக்கிறேன்....
....... பட்டார் நெஞ்சம் போல
கலங்கிய இலங்கை வேந்தனாய்...
இரக்கமில்லா இரக்கமே..
எனக்கு கொஞ்சம் நிம்மதி வேண்டும்..
கண்ணீர் துளிகளில் காணமல் போன
என்னையும் கொஞ்சம் தேடிக்கொண்டே..
மணல் மனிதனாய் கொஞ்சம் சரிந்தாலும்
என்னை செதுக்கிக்கொண்டே நிலைப்பேன்..
சங்கர் நீதிமாணிக்கம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக