எதிர்பாரா தருணத்தின் பெருவெடிப்பில்
தோன்றிய வையம் போல்...
மோதலிலே..
காதலிலே..
மூண்டுவிட்ட மோகத்திலே..
முளைத்துவிட்ட ஓருணர்வில்
அவனும் அவளும்..
காமமில்லா காதலேன்றே
பொய்யுறைத்தாயடி...
மோகப்பெருவெளியில்
மூச்சடக்கி நான் நின்றேன்..
தேகத்தில் படர்ந்துவிட்ட பசலைக்கும்..
தாபத்தில் வெந்துவிட்டமனதிற்கும்..
நோய்தீர்க்கும் மருந்தெனவே
கண்டுகொண்டாய்..
அவள் தீயெனவே உன்தேகம்
சேர்த்தணைத்தாள்...
காமத்தில் வாழ்வதில்லை காதல்..
காதலிலே வாழ்ந்துவிடும் காமம்..
புரிந்துவிட்ட இருதுருவ
அணைப்பினிலே...
அவனும் அவளும்...
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக