யாருக்காக அழுதது வானம்..
கடந்துபோன உயிருக்கா?
தடம்மாறி தவிக்கும் மனிதருக்கா?
சுழன்றடித்த சூறாவளியில்
சுத்தமானது எது?
இடம் மாறிப்போனவைகளும்...
தடம் தொலைந்துப்போனவைகளும் தான்
மிச்சம்..
அந்த
கீழ்த்திசை கடலிலிருந்து
ஆன்மாவின் ஒலியாய்
சுழன்றடித்த காற்று...
தன் உள்ளத்தை சொல்லியதா?
தன் எண்ணத்தை உணர்த்தியதா?
முடிவில்லா கூத்து ஒன்று
அரங்கேற்றமாகிய காட்சிகளில்
சுவாரசியங்களும் சோதனைகளும்...
எது நடந்தாலும் ஏதும் பாதிப்பில்லை
எப்போதும் இருக்கும் கூட்டத்தின்
ஒக்கலிப்பு..
எல்லாம்
கடந்துவந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..
இதையும் கடந்துவிடுவோம்..
வாழ்ந்துவிடுவோம்..
ATM வரிசையில் உலகம் அலசுகிறது
எதையும் தாங்கிக்கொள்ளும் மதில்மேல் பூனைகள்..
எல்லா அடிகளையும் தாங்கிக்கொண்டு
வரிக்கோடுகளாய் வறுமைக்கோடுகள் ஏற்று
அலைக்கழிக்கப்படும் விளிம்புநிலை
மக்களின்
விடியலும் இதிலே உண்டு..
எதுவும் புரியவில்லை..
ஏனென்றும் தெரியவில்லை.
யாருக்காக அழுதது வானம்..?
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக