நிலவென்றாய்.. மலரென்றாய்..
நினைவெல்லாம் நீயென்றாய்...
அழகென்றாய் அல்லியென்றாய்...
தீண்ட வரும் தென்றலென்றாய்..
மேனி தவழும் மலர்மாலையென்றாய்...
கவிதானே நீதானே..
கற்பனையின் ஊற்றுதானே..
உன்னுள்ளம் பொங்கும் வெள்ளம்..
சொல்லடா நீயும்..
உண்மையாக எதுவாய் கண்டாய்..?
உணர்வாக உணர்ந்து சொல்வாய்..
மண்மீதில் பெண்ணாக வடிவுகொண்டேன்..
பொன்மீதில் பொருள்மீதில்
போகங்கோண்டேன்..
என்மனதில் ஏக்கங்களை
மறைத்துக்கொண்டேன்.
உயிரற்ற பொருளாக உணர்ந்துகொண்ட
உன்மனது..
என் உள்ளத்தின் கிடைக்கைகளை அறியலையோ?
கற்பனை கரைகள் கட்டி
சொற்சுவை தமிழ் வார்த்தை ஏரில்..
சுவைக்குதவா பயிராக..
நீயும் எனை விதைத்தாய்..
ஏனடா..
என் நெஞ்சின் நாயகனே..
உனக்கு..
நிஜங்கள் பழக்கமில்லையோ..?
பொய்யே கவியோ?
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக