அவன் திசை தேடும் பறவை..
திக்கறியா காற்று..
வாழ்வின் பிடிதேடி வந்துவிட்ட போதும்
அன்பின் பிணைப்பினிலே
கொண்டதெல்லாம் பிறர்க்கே..
குற்றங்கள் காணவில்லை
சுற்றங்கள் விலக்கவில்லை...
நினைவுகள் எல்லாம்
நெஞ்சிலே சுமந்துகொண்டான்..
வழிவந்த துணையாளோ..
வாழ்க்கை எல்லாம் எனதென்றாள்...
பகிர்ந்தளிக்கும் மனமோ
பரிதவித்து நிற்கிறது..
செய்வதெல்லாம் உன் செயலே..
பெறுவதெல்லாம் என் கடனே..
தோளணைக்க தூரம் சென்றாள்
மனத்துயரம் பகிர்ந்துகொள்ளா மனம்..
மமதையின் குணம்..
வாழ்வென்றால் நீயென்றாள்..
வாழ்க்கை எல்லாம் எனதென்றாள்..
வேடிக்கை உடன்பாடு..
சுமக்கின்ற சுமை நாளும் கூடிவிட..
பங்கெடுக்க மனமில்லை..
துன்பத்தில் பங்கு வேண்டாம்
இன்பமெல்லாம் எனக்கே..
தடாகத்து தண்ணீரும் தாமரையுமாய்....
ஒரு வாழ்க்கை..
என்னடா வாழ்க்கை இது?
ஏக்கங்கொண்ட பிணி வாழ்க்கை..
யாரோ ஒருவன் சொல்லிச்சென்ற
இல்வாழ்க்கை..
பொருத்திப்பார்க்க...
கச்சிதமாய் அமர்ந்துகொண்டேன்
அந்த யாரோ ஒருவனாய்..
வியந்துதான் போனார்கள்
கதைபடித்த பலரும்..
எளிதாய் அந்த யாரோ ஒருவனில்
பொருந்திப்போனதில்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக