வெள்ளி, 8 ஏப்ரல், 2016

சருகு

என்றைக்கும் வருத்தப்படாமல்
நீ உதிர்ந்து விழுகிறாய்
மண்ணுக்கு உரமாக..
எந்த வலையிலும் சிக்காமல்
உன் உதிர்தல் தொடர்கிறது
கயிறுகளால் பிணைக்கப்பட்ட
எங்களின் வாழ்வு போலன்றி
உன் உதிர்வு மிக மென்மையானது..
காற்று ஏந்திக்கொள்ள
பூமி மெல்ல அணைத்துக்கொள்ள
மீண்டும் ஒரு பயணம்..


கருத்துகள் இல்லை: