வலைவீசும் எண்ணங்கள்
17. மனக்கவலை
கவலையில்லாதவன்
என்று இவ்வுலகில் யாருமில்லை. ஒவ்வொருவருக்கு ஒரு கவலை மனதில் என்றைக்கும்
இருந்துகொண்டே இருப்பது மனிதனின் இயல்பாகிவிட்டது. சிலர் கவலைகளை மனம்விட்டு
பகிர்ந்து தங்களின் மனபாரங்க்ளை குறைந்துக்கொள்கின்றனர். பலர் அதை வெளிக்காட்ட
முடியாமலும், வெளிக்காட்ட விருப்பப்படாமலும் உள்ளுக்குள் வைத்து மிகவும் கடினமான
ஒரு வாழ்கையை வாழ்கின்றனர்.
“தனக்குவமை
இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”
மனக்கவலை மாற்றல் அரிது”
என்ற
பொய்யாமொழிப்புலவரின் மெய்யான வரிகளின் ஊடே மனகவலை பற்றி இந்தவாரம் வலைவீசுவோம்..
நம்மில்
பலரும் தன்பிடியில் சிக்குண்டு பாம்பு இறந்துபோனது பற்றி அறியாது உடல் நலிவுற்றி
பயத்தில் வந்த குரங்குக்குட்டியின் கதையை படித்திருப்போம். படிக்காதவர்களுக்காக அதை கீழே பகிர்ந்துள்ளேன்..
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப்
பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது
. குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம்
கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள
பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப்
போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே
பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத்
தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து
குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண
வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி
ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து
போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
அந்த
கதையில் வரும் இந்த பாம்பு தான் மனது மனக்கவலை. நம்முடைய மனது அது உயிருடன்
இருப்பதாக எண்ணியே மனக்கவலையில் வாடி வதங்கி தன்னுடைய இயல்பான வாழ்க்கையை
வாழமுடியாமல் தவிக்கிறது.
இன்றைக்கு பற்பல
அனுபவங்களை கொண்ட பெரியவர்களுக்கு ஈடாக சிறுகுழந்தைகளும் மனக்கவலையால்
அவதிப்படுகின்றார்கள். இதுபற்றிய புரிதல் இல்லாமல் நாமும் அந்த குழந்தைகள் மீது
நமது நிறைவேற ஆசைகளை திணித்து அவர்களின் மனக்கவலையை மேலும் மேலும் நம்மையறியாமலேயே
கூட்டுகிறோம்.
இன்றைக்கு தன்னுடைய
போக்கில் விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் பற்பல காரணம்கள் சொல்லி
விளையாட்டுப்பள்ளி, பாலர் பள்ளி என்று ஒன்றரை வயதிலேயே வீட்டில் இருந்து சுமைகளோடு
வெளியே அனுப்பிவிட்டு அதன் காரணமாக வரும் பொருளாதார சுமையை நாம் சுமத்து அந்த
பொருளாதார சுமையை குறைக்க வேலை வேலை என்று ஓடி நம்முடைய சுமைகளையும்,
மனக்கவலைகளையும் கூடிக்கொண்டே மெல்ல மெல்ல சின்னஞ்சிறு குழந்தைகளையும் பயம், என்ற நீந்தி வெளிவரமுடியாத சாகரத்தில் தள்ளி
விடுகிறோம்.
இப்படி வீட்டிலிருந்தே
ஆரம்பிக்கும் இந்த கவலையானது எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக
தோன்றுவதில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கும். ஆனால் ஏதாவதொறு
வகையில் அவர்களும் இந்தப் பிரச்சனையில் ஆழ்த்தப்பட்டு விடுகின்றார்கள்.
உதாரணமாக இன்றைக்கு
இருக்கும் நிகழ்வுகளான அதிகரித்து வரும் விவாகரத்து, தாய், தந்தை பிரிந்து
வாழ்வது, கூட விளையாட, போட்டிபோட உடன்பிறப்புகள் இல்லாமல்
தனிமையில் வளர்வது, பணத்தின் மூலம் தேவைகள் நிவர்த்தியானாலும் பாசம் கிடைக்காமல்
வளர்வது, பெற்றோர்களின் புரிதல் இல்லாத அன்றாட சண்டை, மிகவும்
பிடித்தமான குடும்ப நபரின் அகால மரணம், புதிய
பள்ளிகூடத்தில் சேர்ந்து படிப்பது அதனால் பழகிய நண்பர்களை பிரிவது, தினமும்
வீட்டுப் பாடம் செய்வது, பெற்றொரின் கருத்துக்கு ஒத்துப் போகமுடியாமல்
தவிப்பது, என்று இன்னும் இதுப்போன்ற பலவிதமான மன
அழுத்தத்தில் குழந்தைகள் சிக்கி சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள்.
இப்படி
மனக்குழப்பத்தில், கவலையில், அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகள்:
எந்த காரணமும் இல்லாமல் அழுது அழுது அடம்பிடிப்பாது, தூங்கும் பொழுது படுக்கையில் சிறுநீர்க் கழிப்பார்கள். கட்டைவிரலை சூப்புவது, நகம் கடிப்பது.
இல்லாத உடல் உபாதைகளை கூறி பெற்றோரின் கவனத்தை பெற முயல்வது. பள்ளிகூடம் செல்ல மறுப்பது, பொய் பேசுவது, மாணவர்களிடமிருந்து பொருட்களைத் திருடுவது, சக மாணவர்களிடம் சண்டை வர காரணமாயிருப்பது, என்று பலவழிகளில் தங்களின் அழுத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
எந்த காரணமும் இல்லாமல் அழுது அழுது அடம்பிடிப்பாது, தூங்கும் பொழுது படுக்கையில் சிறுநீர்க் கழிப்பார்கள். கட்டைவிரலை சூப்புவது, நகம் கடிப்பது.
இல்லாத உடல் உபாதைகளை கூறி பெற்றோரின் கவனத்தை பெற முயல்வது. பள்ளிகூடம் செல்ல மறுப்பது, பொய் பேசுவது, மாணவர்களிடமிருந்து பொருட்களைத் திருடுவது, சக மாணவர்களிடம் சண்டை வர காரணமாயிருப்பது, என்று பலவழிகளில் தங்களின் அழுத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இப்படி
மனக்கவலை அதிகரிக்க அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தல் சிதைந்து போன உறவு முறைகள், கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவானது, நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை,
தன் வீடு என்ற குறுகிய
மனப்பான்மையின் வளர்ச்சி,
யாரும் இல்லையோ என்ற
பாதுகாப்பற்ற உணர்வு, குடிபழக்கம் என பல காரணங்கள்
வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த
கவலைகள் தீர இருக்கும் வழிகள் என்று
பார்த்தால் மற்றவர்களுடனான உறவுமுறைகளை நல்லமுறையில் பேணுவது, தேவையில்லா
மன விரிசல்களை உடனுக்குடன் பேசி தீர்த்து உறவுகளுக்குள் இடைவெளி இல்லாமல்
பார்த்துக்கொள்வது, அன்பை பணத்தின் வழியாக மட்டும் அல்லாமல் தன்னுடைய பாசமான சின்ன சின்ன செய்கையால், கூடிய
மட்டும் அருகாமையில் இருந்து கனிவுடன் உறவுகளை பேணுவது, குழந்தைகளுக்கு,
வளரிளம்பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் நட்புடன் பேசி
எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி, பகிர்ந்து, கோபப்படாமல் அன்புடன் அவர்களை கையாண்டு பிள்ளைகளின்
பிரச்சனைகளை தீர்த்துவைத்து என பலவழிகளில்
நாமும் மனக்கவலையை பெருக்காமல், பிள்ளைகளையும் மனக்கவலையில் ஆழ்த்தாமல்
பார்த்துக்கொள்ளலாம்.
மிகச்சமீபத்தில்
அண்ணன் திரு. Rajam Rajaraman
அவர்களின் பதிவில் படித்த செய்தி இது. நண்பர் ஒருவர் குடல் புண்ணால் (அல்சரில்)
இறந்ததாகவும், அவருக்கு மன உளைச்சலும் நிறைய இருந்தது எனவும் தெரிய வந்தது
.
மனக்குழப்பத்தில்
எழும் மன உளைச்சல் அவருடைய நோயை அதிகப்படுத்தி இருக்குமோ என நட்புகள் சிலர் ஐயுற்றிருகிறார்கள். ஐயமே இல்லை. மன உளைச்சல் குடல் (அல்சரை) மிக அதிகப் படுத்தும். கூடுமானவரை மன
உளைச்சல் இல்லாமலும், மன உளைச்சல் பிறர்க்கு கொடுக்காமல் இருத்தலும்
நலம்.
மன உளைச்சல் ஏற்படும்
போது, மனதினை, நமக்குப் பிடித்த விஷயங்கள் பக்கம் திசை
திருப்பிக் கொள்ள முயலவேண்டும். இல்லை, நாம் மன உளைச்சல் உள்ளவர்களை அன்பாக, அனுசரணையாகப்
பேசி திசை திருப்ப வேண்டும்.
நல்ல இசை, மனதிற்குப்
பிடித்த கோவில், நகைச்சுவை காட்சிகள் பார்த்து மனதினை இலேசாக்கிக்
கொள்ளலாம்.
அதற்கும்
மேல நமது மனக்குறைகளை தீர்க்க இருப்பவன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே.. அவரவர்கள்
தாங்கள் வணங்கும் தெய்வங்களின் சன்னிதி நாடி
"எனக்குள்ளே நீ இருக்க
உனக்குள்ளே நானிருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே'
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே'
என்கிற
பட்டினத்தாரைப் போல மனது மனக்குறைகளை முறையிட்டு முடிந்த மட்டும் மனக்கவலையில்
ஆழாமல் அமைதியான வாழ்க்கை வாழ்வோமாக..
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக