மெல்லத்திரும்பும்
காற்று
வந்து என் மேனி
தீண்டாதோ..
கள்ளத்தனமாய் இல்லை
இங்கு கட்டுப்பாடும்
இல்லை
எண்ணம் எல்லாம்
தெளிவே..
நீ மெல்ல மெல்ல வந்து
என் மேனி தீண்டாயோ..
எரிக்கும் சூரியனே
என்
தேகம் சுட்டது
போதும்..
விட்டுவிடு உன்
கோபத்தை..
கூடவே மெல்ல கட்டவிழ்த்து
விடு
அந்த காற்றையும்..
வரும் காற்றே
துணையாய்
கொஞ்சம் மழை கொண்டு
வா..
என் தேகம் சிலிர்க்க
கொஞ்சம்
நனைந்து கொள்கிறேன்..
தாலாட்ட வரும்
மழைத்துளி எல்லாம்
இந்த பூமி அணைத்துக்கொள்ள
அதன் மேனியும் மோகத்தில்
மெல்ல மெல்ல உருகாதோ..
மெல்ல மெல்ல உருகாதோ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக