'எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் நீதானே..!
மனதிலிருந்து சொல்ல
உயிராய் ஒரு துணைக்கிடைத்தால்
வாழ்வு இனிமையிலும் இனிமை..
என்னுயிர் நீதானே..!
மனதிலிருந்து சொல்ல
உயிராய் ஒரு துணைக்கிடைத்தால்
வாழ்வு இனிமையிலும் இனிமை..
நிகழ்வுகள்
எல்லோருக்கும் சாதகமில்லை...
இழந்த சொர்க்கமாய் சிலருக்கு வாழ்வு..
மலர்ந்த சொர்க்கமாய் சிலருக்கு வாழ்வு..
இழந்த சொர்க்கமாய் சிலருக்கு வாழ்வு..
மலர்ந்த சொர்க்கமாய் சிலருக்கு வாழ்வு..
சொல்லமுடியா
துயரங்களை
தூக்கிக்கொண்டு நடைபோடும் உள்ளங்கள்..
சுமந்திடும் பாரத்தில் கடத்தமுடியா வாழ்க்கை..
தூக்கிக்கொண்டு நடைபோடும் உள்ளங்கள்..
சுமந்திடும் பாரத்தில் கடத்தமுடியா வாழ்க்கை..
நீ தான் என்னுயிர்
என்று சொல்ல முடியவில்லை..
நீ தான் என்றைக்கும் எனக்கு வேண்டும்
நினைக்க முடிவதில்லை..
நீ இல்லா வாழ்வு நிழலில்லா பாலைவனம்
உரக்க கூவ முடிவதில்லை..
நீ தான் என்றைக்கும் எனக்கு வேண்டும்
நினைக்க முடிவதில்லை..
நீ இல்லா வாழ்வு நிழலில்லா பாலைவனம்
உரக்க கூவ முடிவதில்லை..
நிஜங்களில் சாயல்கள்
நினைவுகளை விழுங்கிவிடுகிறது..
ஜென்ம ஜென்மமான பந்தம் என்று செப்பிடும் வாய்கள்
நீ இல்லா உலகே நிம்மதி என்றும் சொல்லும் சிலநேரம்..
ஜென்ம ஜென்மமான பந்தம் என்று செப்பிடும் வாய்கள்
நீ இல்லா உலகே நிம்மதி என்றும் சொல்லும் சிலநேரம்..
ஊடல்கள் இல்லா
வாழ்வில் இனியன இல்லை..
வெறும் சாடலின் வாழ்வில் இனிமையே இல்லை..
வெறும் சாடலின் வாழ்வில் இனிமையே இல்லை..
அதற்கு இது சரி..
இதைவிட அது சரி..
கடந்து கொண்டே போகும் காற்றானது எண்ணம்..
இதைவிட அது சரி..
கடந்து கொண்டே போகும் காற்றானது எண்ணம்..
விலகிடும் நாட்கள்
இனிமை என்றால்
வாழ்த்திடும் நாட்கள் வலிகள் தானே..
வாழ்த்திடும் நாட்கள் வலிகள் தானே..
'எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் நீதானே..!
என்றுரைக்க எல்லோருக்கும் ஆசைதான்..
இயல்பினில் உண்மை இனிக்கவில்லையே..
என்னுயிர் நீதானே..!
என்றுரைக்க எல்லோருக்கும் ஆசைதான்..
இயல்பினில் உண்மை இனிக்கவில்லையே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக