அன்பின் விளக்கு
பாசதேவதை
தியாகதீபம்..
***
நேசிப்பின் வாசல்
நிம்மதியின் மடி
வாழ்வின் வழி
****
துயரத்தில் தோழியாகி
இன்பத்தில் தாதியாகி
காதலில் தாயானவள்
****
ஆண்மைக்கு மெய் தந்து
உணர்வுக்கு உயிர் தந்து
காக்கும் பொறுமை பூமி
*****
மௌனத்தில் பேசி
கண்களால் கவரும்
மின்சார மொழி..
****
அதீத அன்பால் அணைப்பவள்
மனப்பிளவென்றால்
நெருப்பாய் எரிப்பவள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக