எல்லா வாகனமும்
சரியாக
சாலையில்
சென்றுகொண்டு இருக்கையில்
யாருக்கென்ன பிரச்சனை...
எல்லோர் பணயமும்
இலகுவாய்..
எல்லாம் ஒரே சீராய்..
எல்லோர் சிந்தனையும்
நேர்மறையாய்..
எல்லோர் இலக்கும்
எளிதாய் எட்டக்கூடியதாய்...
சாலையில் மேடுபள்ளம்
வரும்போது.....
நமக்கு முன்னே
செல்பவர் சீரற்று
செல்லும்போது….
நமது நேர்மறை சிந்தனை அங்கே
தோற்றுப்போகிறது..
மனம் பல
சாத்தியக்கூறுகளை சிந்திக்கிறது..
கண்கள் மிகமிக
விழிப்போடு
சாலை நோக்குகிறது..
எதிர்மறை சிந்தனையும்
உள்ளத்தில் வந்து
எதை எப்படி
சமாளிக்கலாம்
என்ற உணர்வுடன்
அங்கங்கள் எல்லாம்
விழித்துக்கொள்கிறது....
அனைத்து உணர்வுகளும்
விழிப்போடு
எந்த செயலையும்
எதிர்பார்த்து..
உங்கள் வாகனம்
செலுத்தப்படும் போது
உங்களின்
பயணப்பாதுகாப்பு கூடுகிறது..
இதுவே தான் வாழ்க்கையிலும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக