உயிர்களுக்குள்
உயர்வென்று
ஏக்கழுத்தம்
கொண்டவரே...!
செல்வத்தை கொண்டிங்கு
எடை போடும் மானுடமே..
அன்பெதற்கு,
பண்பெதற்கு
பந்த பாசமெதற்கு..
பாழும் உலகினிலே
உறவுகள் சீர்கெட்டது
பணத்தால் தானே...!
பணத்தாலே எடைபோட
பண்பாடுக்கல்வி என்ன?
அன்பாலே இறங்காதோர்
ஆயுளுக்கும்
வாழ்ந்தென்ன?
ஒற்றை வார்த்தையிலே
உயிர்குடிக்கும்
விடம் வைத்து
எட்டிப்போகையிலே
ஏகதாள பேச்சுமென்ன?
பணம் தானே உயர்வென்று
இருப்போருடன்
வாழ்வதே
பிணவாழ்க்கை..
அறியீரோ...!
பணம் தானே பிணம்
போகும்
பள்ளம்வரை...
--சங்கர்
நீதிமாணிக்கம்
(சொல்குறிப்பு:
ஏக்கழுத்தம் – இறுமாப்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக