கேள்விகள் தான்
நமது வாழ்வை
சீரமைத்து
நாகரீக சமுதாயம்
மிளிர வைத்துள்ளது.
கேள்விகளே
எல்லா
கண்டுப்பிடிப்புகளுக்கும்
வேராக
இருந்திருக்கிறது..
பலகேள்விகள் இன்னும்
விடை தெரியாமல் பவனி
வருகின்றன...
சில கேள்விகளுக்கு
விடைகள்
எந்த சூழ்நிலையிலும்
வரலாம்
ஆர்கிமிடிஸ்க்கு
தெளிந்தது போல..
சில கேள்விகளுக்கு
விடைகள்
பல தவறான விடைகளுக்கு
பின்பு
தெரியவரலாம்
எடிசனின் மின்விளக்கு
போன்று..
கேள்விகளை
ஏற்றுக்கொண்டு
விடைகளை தேடுங்கள்..
பிள்ளைகளின் எந்த ஒரு
கேள்வியையும்
பாதியில் ஓடிக்காமல்
வளர விடுங்கள்.
நல்ல விடையும்
கிடைக்கும்...
சிறந்த எதிர்காலமும்
வளரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக