வாழ்க்கையின் தேவை
எது??
வெற்றியின் தேவை
எது??
கொஞ்சம் தேடுதல்..
கொஞ்சம் அலசல்..
ஏற்றம் தருவதும்
வெற்றி தருவதும்
தன்னம்பிக்கையா?
சாமர்த்தியமா?.
எதை வேண்டுமானாலும்
அடைய ஆசைப்படலாம்
ஆசை நியாயமானதா?
சாதிக்க திறமை இருக்கிறதா?
திட்டமிடல், விடாமுயற்சி, கடின
உழைப்பு...??
எதையும் சாதிக்கலாம்.
செயல் என்பது உயிரின்
இசை
சொல்லுவது தன்னம்பிக்கை..
செய்வது சாமர்த்தியம்..
அச்சமகற்றி துணிவு
தருவது
தன்னம்பிக்கை..
வாழ்வியல் கணக்கீட்டில்
வெற்றிக்கு
கொண்டுசெல்வது
சாமர்த்தியம்..
தவழ்தலிலே மலரும்
தன்னம்பிக்கை...
மெல்ல எழுவதில்
நிற்குது சாமர்த்தியமாய்
விழுந்தாலும் எழுவது
தன்னம்பிக்கை..
எழுந்ததும் வலிகாட்டாது
வாள்பிடிப்பது சாமர்த்தியம்...
தேவைகளை தேடத்தருவது
தன்னம்பிக்கை...
தேவைகளை
பெற்றுத்தருவது
சாமர்த்தியம்..
தன்னம்பிக்கை
போதையல்ல
தனிமனித சிந்தனையின் ஏற்றம்..
சாமர்த்தியம்
தீண்டாமையல்ல..
தீயவழி செல்லா வரை..
தன்னம்பிக்கை கைப்பிடியாகின்
சாமர்த்தியம்
கூர்கத்தி..
நல்லதா, கெட்டதா..
உள்ளோர்கை செயலே...
தன்னம்பிக்கை
வாழ்கையை
வாழவைக்கும்..
சாமர்த்தியம்
வாழ்க்கையை கொண்டாடவைக்கும்..
-
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக