அச்சம் தவிர்..
இது நம் மீசைக்கார
கவிஞன்
பாரதியின் துடிக்கும்
வாக்கல்லவோ...
அச்சமென்பது நெஞ்சின்
கோழைத்தனம்...
அச்சமென்பது கோழையின்
அகராதி..
அச்சமென்பது
அடிமையின்
மொழி..
அச்சம் தவிர்த்தலே
உண்மையின் வீரம்..
அச்சம் தவிர்த்தலே
நேர்மையின் வழி..
அச்சம் தவித்தாலே
மனிதத்தின் மொழி..
அன்பில் அச்சமென்பது
இருக்காது..
அச்சம் தரும்
மனிதரின் பால்
அன்பு பிறக்காது..
அச்சமில்லா உயிர்கள்
இல்லை..
அச்சமில்லா
மனிதரில்லை
எல்லாம் முகமுடி
தரிதவரே..
ஆனாலும்..
அச்சமில்லாதவன்
அம்பலம்
ஏறுவான் இது பழமொழி..
சரிதானே...
அச்சமில்லாதவர்க்கு
எதைக்கண்டு மனதில்
பயம்...
அச்சமே தீமையின்
தாய்..
அச்சமே அழுகையின்
பிறப்பு..
இது வீரத்துறவியின்
வீர மொழிகள்..
புரிந்துகொள்வோம்..
அச்சப்படுபவனால் சிறு
குட்டையையும்
தாண்ட முடியாது..
இது சாணக்கியன்
சொல்..
எப்போதும்.. யாவரும்..
மனதில் வைப்போம்..
அச்சங்கொள்வோம் பசி
கண்டு
அச்சங்கொள்வோம்
சினத்தைக் கண்டு..
பசியும், சினமும்
பெருகப்பெருக
அது மிகப்பெரும்
அழிவாயுதமாய்
நம்முன் நிற்கும்..
அச்சப்படுவோம்.. தீங்கு
செய்ய....
அச்சப்படுவோம்.. தவறு
செய்ய....
அச்சப்படுவோம்.. பொய்
சொல்ல..
அச்சப்படுவோம்... பிறரை
ஏமாற்ற...
-சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக