ஒருநிலை ஒருமனம் கொண்டது
இருநிலை இருமனம்
கண்டது
நேசத்தில் தைத்த
என் நெஞ்சது நைந்தது
புரியாத புதிராக
ஒருகாதல்
உதிர்ந்தது..
பூத்திடும் பூக்கள்
வீழ்வது நிஜம்தான்
புன்னகை பூத்திடும்
வாழ்வில் அதனால்..
கைவிரல் கோர்த்து
கனவினால் ஈர்த்து
கண்ணுக்குள் நிறைந்த
காதலும் நிஜம்தான்
எண்ணிலா வார்த்தை
எண்ணிலா கனவு
எண்ணிலா இன்பம்
எல்லாம் உன்னால்..
வந்தது நிஜம்தான்
சொன்னது வார்த்தை
சுடுவது மனது
அழுவது கண்கள்
கரையுமோ காதல்?
தேகங்கள் தீண்டிட..
மோகங்கள் மலர்ந்திட
முத்தங்கள் சிதறிட..
மௌனமாய் காவியம்..
எல்லாம் மறந்தது
இருள்வந்து
சூழ்ந்தது..
மழைத்துளி கானா
வனமாய் காய்ந்தது..
புரிதலின் ஊற்று
இல்லாத மனமாய்
உப்பாய் கரையுது
கடலில் தெறித்த
சிறுதுளியாய்
காதல்...
-சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக