ஓடி ஓடி களைத்து விட்டோம்
பணம் தேடித்தேடி சோர்ந்து விட்டோம்
ஓட்டமும் நடையுமாய் வேலைக்கு ஓடி
அரைகுறையாய் பசிக்கு உண்டு
அல்லும் பகலும் சேர்ப்பது எதற்கு....
சொந்தங்களின் தொடர்பறுத்தோம்
சுற்றங்களின் சுகம் இழந்தோம்
எதிர்வாசல் இருப்போர் அறியாது
முகமறியா நட்பில் மூழ்கிவிட்டோம்
வேலையின் அலைகழிப்பில்
ஊர் அறுத்தோம்.....
பணத்தின் மோகத்திலே
உறவு அறுத்தோம்.....
எண்ணத்தின் குறுக்கத்தால்
சுற்றம் அறுத்தோம்...
உலகோடு வாழ்வோமென்று
சுயம் அறுத்தோம்....
எல்லாம் அறுத்தபின்பு
எதற்கு வாழ்வு..
1 கருத்து:
அதானே...? ஆமா ஏனிந்த வெறுப்பு...?
கருத்துரையிடுக