வெள்ளி, 11 செப்டம்பர், 2015

காடு

மழைக்காவலன் - இந்த 
மண்ணின் காவலன்
உயிர்க்காவலன் - இந்த 
உலகின் காவலன்
வளிக்காவலன் - நம் 
வாழ்வின் காவலன்
பச்சை போர்வை கொண்டு - வானின் 
நீலப்போர்வை காப்பவன்
 எச்சமிட்ட இலைகள் கொண்டு 
உயிர் உரமாய் திருப்பி தருபவன்

பல்லுயிர்களின் பல்கலைக்கழகம்
நல்லுயிர்களின் உயிர்நாடி

சுடுகின்ற சூரியனின் 
எரிக்கும் கரம் நறுக்கி
வானிருக்கும் நீர்த்துளியை 
மண்ணிழுத்து வளமாக்கி
சொர்க்கமான பூமி தந்ததிந்த காடு 

உயிர்ச்சமநிலையும் உலகச்சமநிலையும் 
தடையின்றி வளம்கொழிக்க 
வந்ததே  ஒரு ஆபத்து ...... 

சிந்திக்கக் கற்ற 
ஆறறிவு மிருகமொன்று
மனிதமென்று பெயர்கொண்டு
காடழித்து நாடாக்கி
கருவழிக்க வந்தபின்னே....

ஆறறிவின் கீழுயிர்கள் 
செயலற்று மண் மறைய
எக்காளமிட்டுச் சென்றது 
இருகால் மிருகம்.....

காடு கொன்று
கரை கொன்று
ஆறு கொன்று
வளம் கொன்று

நிறைவில் தன்தலையை 
தானே திருகி..
அறிவில் சிறந்ததென்று 
ஆங்காரத்தில் ...

பாவம்...
மனிதம் என்ற பெயர் கொண்ட
அந்த ஆறறிவு மிருகம்..



 




கருத்துகள் இல்லை: